துணிவு முதல் மாவீரன் வரை.. தொட்டதெல்லாம் ஹிட்டு! 6 மாதத்தில் 6 பிளாக்பஸ்டர் மூவீஸ்- மாஸ் காட்டும் ரெட் ஜெயண்ட்
கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்துகொண்டிருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ், இந்த ஆண்டு வெளியிட்ட ஆறு திரைப்படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய நிறுவனம் தான் ரெட் ஜெயண்ட். ஆரம்பத்தில் இருந்தே பல வெற்றிப்படங்களை தயாரித்து வரும் ரெட் ஜெயண்ட். கடந்த சில ஆண்டுகளாக படங்களை விநியோகம் செய்வதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிவந்த பெரும்பாலான பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தையும் ரெட் ஜெயண்ட் தான் வாங்கி வெளியிட்டது. அந்த வகையில் 2023-ம் ஆண்டு அந்நிறுவனம் வெளியிட்ட 6 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன.
துணிவு
2023-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் வெளியிட்ட முதல் திரைப்படம் துணிவு. அப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி ரூ.200 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
டாடா
பிப்ரவரி மாதம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கி வெளியிட்ட திரைப்படம் தான் டாடா. கவின், அபர்ணா தாஸ் நடித்திருந்த இப்படத்தை கணேஷ் கே பாபு என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தை பார்த்த உடனே இது கண்டிப்பாக ஹிட் ஆகும் என தோன்றியதால் வாங்கியதாக உதயநிதியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவர் கணித்தபடியே டாடா படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
விடுதலை
மார்ச் மாதம் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் கைப்பற்றி இருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில்ச் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.60 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
பொன்னியின் செல்வன் 2
2023-ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்றால் அது பொன்னியின் செல்வன் 2 தான். இப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது. மணிரத்னம் இயக்கிய இந்த பிரம்மாண்ட படைப்பு பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடி வசூலித்தது.
இதையும் படியுங்கள்... அட கடவுளே... சமந்தாவை போல் நடிகை நந்திதாவுக்கு இப்படி ஒரு அரியவகை நோய் பாதிப்பா? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்
மாமன்னன்
ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதியின் கடைசி படமான இது ஜூன் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.
மாவீரன்
ரெட் ஜெயண்ட்டின் லேட்டஸ்ட் வெளியீடு தான் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இப்படம் ஜூலை 14-ந் தேதி திரைக்கு வந்தது. ரிலீஸ் ஆன நான்கே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது இப்படம்.
அடுத்தது என்ன?
2023-ம் ஆண்டின் முதல் பாதியில் 6 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், அடுத்ததாக வெளியிட உள்ள திரைப்படம் ரஜினியின் ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும். இதற்கு அடுத்தபடியாக செப்டம்பரில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் தான் வெளியிட உள்ளது.
இதையும் படியுங்கள்... சிகரெட் வாங்க கூட காசு இல்ல.. டாக்சி ஓட்டுனேன்; லவ் பிரேக் அப் ஆனதால் தற்கொலைக்கு முயன்றேன்- அப்பாஸ் ஓபன் டாக்