- Home
- Cinema
- குட் பேட் அக்லி முதல் கேங்கர்ஸ் வரை மே மாதம் OTTயில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் இதோ
குட் பேட் அக்லி முதல் கேங்கர்ஸ் வரை மே மாதம் OTTயில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் இதோ
மே மாதம் திரையரங்குகளில் புதுப்படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆவதைப் போல், ஓடிடி தளங்களிலும் ஏராளமான புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

OTT Release Movies on May 2025 : மே மாதம் கோடை விடுமுறை என்பதால் புதுப்படங்கள் அதிகளவில் வெளியாகும். அந்த வகையில் மே 1ந் தேதி சூர்யா நடித்த ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி, நானி நடித்த ஹிட் 3 போன்ற படங்கள் ரிலீஸ் ஆகின. தியேட்டரைப் போல் ஓடிடியிலும் இந்த மாதம் புதுப்படங்கள் அதிகளவில் ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி மே மாதம் என்னென்ன படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
வருணன்
மே 2ந் தேதி ரிலீசாகும் படங்கள்
மே 2-ந் தேதி ஓடிடியில் இரண்டு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அதில் ஒன்று சின்னத்திரை நடிகைகளான கேப்ரியல்லா, ஹரிப்பிரியா ஆகியோர் நடித்த வருணன் படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதேபோல் புதுமுகங்கள் நடித்துள்ள EMI என்கிற திரைப்படம் மே 2ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
அஜித்
குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வந்த படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்தது. இந்நிலையில், இப்படம் வருகிறா மே 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
கேங்கர்ஸ் போஸ்டர்
கேங்கர்ஸ்
சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு, வாணி போஜன், கேத்தரின் தெரசா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் கேங்கர்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இந்த மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இம்மாத இறுதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துடரும்
மற்ற மொழி படங்கள்
மே 7 அன்று வெளியாகும் லாஸ்ட் புல்லட், மே 15 அன்று வெளியாகும் லவ் டெத் ரோபோட்ஸ் சீசன் 4, மே 22 அன்று வெளியாகும் சைரன்ஸ், மே 23 அன்று வெளியாகும் ஃபியர் ஸ்ட்ரீட் ப்ராம் க்வீன் போன்றவை நெட்ஃபிளிக்ஸில் இந்த மாதத்தின் முக்கிய வெளியீடுகள். ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தர் மே 30 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும். இதுதவிர மோகன்லால் நடித்த துடரும் என்கிற மலையாள படமும் இந்த மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.