இந்த வாரத்தோடு 'குட் பேட் அக்லி'-க்கு முடிவு கட்டும் திரையரங்குகள்! மொத்த வசூல் எவ்வளவு?
Good Bad Ugly Collection: 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த 2 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்ட நிலையில் இந்த வாரத்தோடு பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடாமுயற்சி:
தல அஜித் நடிப்பில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் 'விடாமுயற்சி'. இந்த படத்தை ஆக்ஷன் மற்றும் அதிரடி காட்சிகளுக்கு பெயர் போன திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். 2 ஆண்டுகளுக்கு மேல் படப்பிடிப்பில் இருந்த இப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும்... எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்த நிலையில், அர்ஜுன், ரெஜினா, போன்ற பலர் நடித்திருந்தனர்.
பத்ம பூஷன் விருது:
இப்படத்தின் தோல்விக்கு கதைக்களம் தான் காரணம் என கூறப்பட்டது. அதே நேரம் அஜித், தன்னுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், ஆக்ஷன் மற்றும் கார் ரேஸிங் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்து அசத்தி இருந்தார். 'விடாமுயற்சி' மூலம் அஜித் ரசிகர்களை ஏமாற்றி இருந்தாலும், துபாய், ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இதற்காக அஜித்தை கௌரவிக்கும் விதமாக அவருக்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது. இதை நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பெற்றுக்கொண்டார்.
முன்பதிவிலேயே குட் பேட் அக்லி சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ரெட்ரோ!
கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் அஜித்
இது ஒருபுறம் இருக்க, அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இரண்டாவது திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தை, திரிஷா இல்ல நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கிய ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்த மாதம் (ஏப்ரல் 10)-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தில், அஜித் ரெட் டிராகனாக ஒரு கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித்துடன் இணைந்து இப்படத்தில் திரிஷா, பிரசன்னா, உள்ளிட்டா பலர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், கடந்த 3 வாரங்களாக ரசிகர்கள் மத்தியில், நல்ல வசூலை பெற்று வந்த நிலையில், இந்த வாரம் அதாவது (மே 1) ஆம் தேதி சூர்யாவின் 'ரெட்ரோ' மற்றும் சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
குட் பேட் அக்லி:
எனவே இந்த வாரத்தோடு பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து 'குட் பேட் அக்லி' தூக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே போல் ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே இந்த படம் தொடர்ந்து ஓடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்ஸ் ஆபிஸில் குட் பேட் அக்லியை ஓட ஓட விரட்டும் கேங்கர்ஸ் - ஆத்தாடி இத்தனை கோடி வசூலா?
'குட் பேட் அக்லி வசூல்:
இதுவரை 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலக அளவில், 280 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே அதிக வசூலை பெற்றது 'குட் பேட் அக்லி' திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 500 கோடியை எட்டும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு... 300 கோடியை கூட இப்படம் எட்டாதது சிறு ஏமாற்றம் எனலாம்.