நடிகர் பிரபுவுக்கு என்ன ஆச்சு? மூளையில் நடந்த அறுவை சிகிச்சை - வெளியான பரபரப்பு தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அறியப்படும், பிரபுவுக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Prabhu Ganesan Brain Surgery News
68 வயதாகும், நடிகர் பிரபு தமிழ் சினிமாவின் உள்ளே ஒரு வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையால் தனித்து தெரிந்தவர். தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனமாக இருந்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாக இருந்தாலும், எந்த ஒரு விஷயத்திலும் தன்னுடைய தந்தையின் சாயலை பின்பற்றாமல் நடித்தவர் பிரபு.
Prabhu Ganesan Movies
பிரபு தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும் ஒரு நடிகராக அறிமுகமாவதில் சிவாஜி கணேசனுக்கு ஆரம்பத்தில் உடன்பாடு இல்லை என்றாலும், பின்னர் மகனின் ஆசைக்காக ஒப்புக்கொண்டார். 1982-ஆம் ஆண்டு வெளியான சங்கிலி என்கிற படத்தின் மூலம் அறிமுகமான பிரபு, ஆரம்பத்தில் இருந்தே மிகவும் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். மேலும் இவர் அறிமுகமான அதே வருடத்தில் மட்டும் சுமார் 6 படங்களில் நடித்த நிலையில், இதில் அதிசய பிறவிகள், சின்னஞ் சிறுசுகள், கோழி கூவுது போன்ற படங்களை இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.
போன மாசம் 2 கோடிக்கு போட் ஹவுஸ்; இந்த மாசம் சொகுசு கார் வாங்கிய ஆல்யா மானசா - குவியும் வாழ்த்து!
Prabhu Ganesan upcoming movie is Good Bad Ugly
1983-ல் சுமார் 10 படங்களில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து 15 ஆண்டுகள் படு பிஸியான ஹீரோவாக வலம் வந்த பிரபுவுக்கு, சின்னத்தம்பி திரைப்படம், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்று தந்தது. ஹீரோவாக இருந்தாலும் டைமிங் காமெடிய மூலம் ஸ்கோர் செய்வதில் நடிகர் பிரபு கில்லாடி. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபு, தற்போதைய இளம் ஹீரோக்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களில் அப்பா, மாமா போன்ற வலுவான குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு PT சார் என்கிற படத்தில் நடித்த பிரபு, இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'குட் பேட் அக்லீ' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இவருடைய மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Prabhu Ganesan Discharged
எப்போதும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் கலகலப்பான நடிகரான இவருக்கும் மூளையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக, zoom வலைதளபக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. "நடிகர் பிரபு கணேசன் மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் ,மூளை அனீரிசிம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
டிக்கெட் டூ பினாலே வெற்றியாளரை அறிவிக்க - பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அறிவித்த விஜய் சேதுபதி! புரோமோ
What Problem for Prabhu Ganesan
மேலும் காய்ச்சல் மற்றும் தலைவலி அறிகுறியுடன், மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் பிரபு சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடுமூளை தமனியின் பிளவு பகுதியில் உள்ள உள் கரோடிட் தமனியின் மேல் பகுதியில் வீக்கம் அல்லது பலூன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் பிரபு தொடர்ந்து ஓய்வில் இருந்து வருவதாகவும், அவரை குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அவர் விரைவில் நலம் பெற வாழ்த்து கூறி வருகிறார்கள்.