டிக்கெட் டூ பினாலே வெற்றியாளரை அறிவிக்க - பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அறிவித்த விஜய் சேதுபதி! புரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் தமிழ் சீசன் 8' நிகழ்ச்சியில் முதல் பைனலிஸ்ட் யார் என்பதை அறிவிக்க, விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 

Vijay sethupathi entry in bigg boss house announced TTF winner mma

வெற்றிகரமாக 91 நாட்களை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள போட்டியாளர்களை குறைப்பதில் தீவிரம் காட்டி வரும் பிக்பாஸ், தொடர்ந்து டபுள் எவிக்ஷன் செய்து வருகிறார். அந்த வகையில் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வங்கியில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில், ஃபைனலிசில் ஒருவராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சரி மற்றும் ராணவ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Vijay sethupathi entry in bigg boss house announced TTF winner mma

புஷ்பா 2 OTT ரிலீஸ்; எந்த ஓடிடி தளத்தில் - எப்போது வெளியாகிறது தெரியுமா?

தற்போது டாப் 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், இவர்களில் டாப் 5 கண்டெஸ்டெண்ட்டாக பைனலுக்குள் நுழைய உள்ளது யார் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில்  கடந்த வாரம் போட்டிகளாளர்களை நேரடியாக பைனலுக்குள் அழைத்துச் செல்லும் டிக்கெட் டூ  பினாலே டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகளை பெறும் போட்டியாளரே நேரடியாக பைனலுக்குள் நுழைவார் என பிக்பாஸ் அறிவித்தார். இதில் இடம்பெற்ற அனைத்து டாஸ்க்களிலும், பிரபல சீரியல் நடிகர் ரயான் திறமையாக விளையாடி, முன்னணி இடத்தை பிடித்தார்.

Vijay sethupathi entry in bigg boss house announced TTF winner mma

இவருக்கு அடுத்தபடியாக முத்து குமார் மற்றும் மஞ்சரி ஆகியோர் இந்தனர். இந்நிலையில் ரயான் கண்ணாடி கோப்பையுடன் நடக்கும் டாஸ்கில், யாரும் பார்க்காத நேரத்தில் கைகளை வைத்து அட்ஜஸ்ட் செய்ததாக கூறப்பட்டது. எனவே இவர் விதிமீறல் செய்து 4 புள்ளிகளை பெற்றதாகவும், இதன் காரணமாக... இவர் பெற்ற புள்ளிகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ரயான் டிக்கெட் டூ பின்னால் டாக்கை வென்று முதல் போட்டியாளராக ஃபைனலுக்குள் நுழைந்தார்.

'சிந்து பைரவி' சீரியல் துவங்கும் முன்பே ஜூட் விட்ட ரவீனா தாஹா! வில்லியை ஹீரோயினாக்கிய விஜய் டிவி!

டிக்கெட் டூ பினாலே வென்ற ராயனுக்கு அதுக்கான அங்கீகாரத்தை கொடுக்க, விஜய் சேதுபதியை இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். இதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் வீடே மிகவும் செல்லபிரேஷன் மோடில் காணப்படுகிறது. வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்து முதல் ஃபைனலிஸ்ட்டாக ரயான் உள்ளே சென்றது யாரும் எதிர்பாராத ஒன்று தான் என்றாலும், இவர் டைட்டில் வெல்வதற்கான வாய்ப்பு குறைவு என்பதே ரசிகர்கள் கருத்து. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios