துருவ நட்சத்திரம் பற்றி அடிபொலி அப்டேட் வெளியிட்ட கெளதம் மேனன்...!
விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பற்றிய சூப்பர் அப்டேட்டை இயக்குநர் கெளதம் மேனன் வெளியிட்டுள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

Dhruva Natchathiram Update
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் என பெயரெடுத்தவர் கெளதம் மேனன். கடந்த 2017-ம் ஆண்டு விக்ரம் உடன் கூட்டணி அமைத்த கெளதம் மேனன் துருவ நட்சத்திரம் என்கிற படத்தின் பணிகளை தொடங்கினார். இதன் படப்பிடிப்பு துருக்கி உள்பட பல்வேறு நாடுகளில் பரவலாக நடந்தது. இப்படத்தில் விக்ரம் உடன் திவ்யதர்ஷினி, ராதிகா சரத்குமார், ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள்.
துருவ நட்சத்திரம்
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி தான். வாரணம் ஆயிரம் படத்திற்கு பின் இவர்கள் காம்போ சுமார் 7 வருடங்களுக்கு பணியாற்றாமல் இருந்து வந்தனர். அவர்கள் இருவரும் இப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்க காத்திருக்கின்றனர். இப்படத்தில் நடிக்க முதன் முதலில் ரஜினியை தான் அணுகினாராம் கெளதம் மேனன். ஆனால் அவர் இந்த கதைக்கு செவிசாய்க்காததால் சூர்யா வசம், சென்றது. ஆனால் அப்படம் அறிவிப்போடு நின்று போனதால், விக்ரம் வசம் சென்றது துருவ நட்சத்திரம்.
கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம்
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும், அதன்பிற்கு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது இப்படம். இப்படத்தை கெளதம் மேனன் தான் முதலில் தயாரித்தார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், வெளிநாட்டில் படப்பிடிப்பு என எக்கச்சக்க செலவுகள் வந்ததால் படத்தின் பட்ஜெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியில் சிக்கினார் கெளதம் மேனன். இதனால் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் முடங்கின.
கெளதம் மேனன் கொடுத்த துருவ நட்சத்திரம் அப்டேட்
கடந்த ஆண்டு மதகஜராஜா நீண்ட இடைவெளிக்கு பின் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனதால், துருவ நட்சத்திரம் படத்தை மீண்டும் தூசிதட்டி ரிலீசுக்கு தயார்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குநர் கெளதம் மேனன் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி அப்படத்தின் நிதிப் பிரச்சனை முடியும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் அப்படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்றும் கூறி இருக்கிறார். இதனால் இந்த ஆண்டு துருவ நட்சத்திரம் படத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

