- Home
- Cinema
- கே.ஜி.எஃப் பாணியில் ரிலீசாகும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு... கவுதம் மேனன் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்
கே.ஜி.எஃப் பாணியில் ரிலீசாகும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு... கவுதம் மேனன் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்
Simbu : கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா சரத்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் நடித்த சிம்பு தற்போது அவருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இதானி என்கிற அறிமுக நடிகை நடித்துள்ளார். இப்படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. விரைவில் ஆடியோ லான்சும் நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்... துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட கவுதம் மேனன் - படு குஷியில் விக்ரம் ரசிகர்கள்
இந்நிலையில், இப்படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட்டை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக சமீபத்திய பேட்டியில் அவர் அறிவித்துள்ளார். முதல் பாகம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த பாகத்திற்கான ஷூட்டிங் தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதாக அவர் கூறி உள்ளார்.
முதல் பாகத்தில் சிம்பு சாதாரண இளைஞனாக இருந்து எப்படி கேங்ஸ்டர் ஆனார் என்பதை காட்ட உள்ளதாகவும், இரண்டாம் பாகத்தில் அவரின் கேங்ஸ்டர் வாழ்க்கை குறித்து காட்ட உள்ளதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். பத்து தல படத்திலும் சிம்பு கேங்ஸ்டராக நடித்து வருவதால் அதே லுக்கில் வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் பிரபலம் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொலை? சகோதரர் பரபரப்பு புகார்!