- Home
- Cinema
- துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட கவுதம் மேனன் - படு குஷியில் விக்ரம் ரசிகர்கள்
துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட கவுதம் மேனன் - படு குஷியில் விக்ரம் ரசிகர்கள்
dhruva natchathiram : 2022-ம் ஆண்டு விக்ரம் நடித்துள்ள கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படமும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

ஸ்டைலிஷ் இயக்குனரான கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ராதிகா, சிம்ரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக முடங்கியது.
சுமார் 4 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இப்படம் சமீபத்தில் மீண்டும் உயிர்பெற்றது. சியான் விக்ரம் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... OTTக்கு ரூ.200 கோடிலாம் கம்மிங்க.. தியேட்டரில் இதவிட அதிகவசூல் அள்ளுவோம்- வைரலாகும் லைகர் நாயகனின் பழைய டுவிட்
சமீபத்திய பேட்டியில் இப்படம் குறித்து பேசிய கவுதம் மேனன், நடிகர் விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் பட ரிலீஸ் வேலைகளில் தற்போது பிசியாக இருப்பதாகவும், அந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆன உடன் துருவ நட்சத்திரம் படத்தின் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த ஆண்டு விக்ரம் நடித்துள்ள கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படமும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது விக்ரம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. துருவ நட்சத்திரம் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... பாறைக்கு நடுவே.. பஞ்சு மெத்தையில் படுத்தபடி ஹாய்யாக போஸ் கொடுக்கும் நயன்தாரா! கலக்கல் ஹனி மூன் போட்டோஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.