பாறைக்கு நடுவே.. பஞ்சு மெத்தையில் படுத்தபடி ஹாய்யாக போஸ் கொடுக்கும் நயன்தாரா! கலக்கல் ஹனி மூன் போட்டோஸ்!
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது, இரண்டாவது ஹனி மூனுக்காக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், தற்போது... பாறைக்கு நடுவே நயன்தாரா படுத்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, திருமணம் செய்து கொண்டுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, மீண்டும் தங்களுடைய பணிகளில் பிஸியாகினாலும்... அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று, ஹனி மூனாக கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த ஜூன் மாதம் திருமணம் முடிந்த கையேடு... தாய்லாந்துக்கு முதல் ஹனிமூன் சென்ற நயன் - விக்கி ஜோடி, சமீபத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு இரண்டாவது ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளனர். அங்கு எடுக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் தினந்தோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார் விக்கி.
மேலும் செய்திகள்: அஜித்தின் ஆளுமா டோலுமா பாடலுக்கு மேடையில் வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்! வைரலாகும் வீடியோ!
மேலும் இவர்கள் ஸ்பெயின் நாட்டை தேர்வு செய்வதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதாவது, அஜித்தை வைத்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்க உள்ள திரைப்படத்தின் பெருவாரியான காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தில் நயன்தாராவும் நடிக்க உள்ளகாக கூறப்படுவதால், ஒரு பக்கம் ஹனி மூனை அனுபவித்து கொண்டே... மற்றொரு புறம் லொகேஷன் பார்த்து வருகிறார்களாம்.
'வாலன்சியா' அழகை வளைத்து வளைத்து காட்டி நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் விக்கி. இதை தொடர்ந்து தற்போது நயன்தாரா, பாறைகளுக்கு நடுவே போடப்பட்டிருக்கும் பஞ்சு மெத்தையில் படுத்து கொண்டு போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... லைட்டாக இடையை காட்டி குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்!