- Home
- Cinema
- இபிஎஸ் முதல்வராக தீச்சட்டி எடுக்க போறேன்! அதிமுகவில் பங்காளி சண்டை! திமுகவை மறைமுகமாக விளாசிய கஞ்சா கருப்பு.!
இபிஎஸ் முதல்வராக தீச்சட்டி எடுக்க போறேன்! அதிமுகவில் பங்காளி சண்டை! திமுகவை மறைமுகமாக விளாசிய கஞ்சா கருப்பு.!
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுக்கும் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் தீச்சட்டி எடுக்கப்போவதாக கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கந்தசாமி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாயொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காமெடி அவர்;- இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. அதனால் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டுள்ளேன். இதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுக்க போகிறேன். எதுக்காகனா, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுக்கும் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் தான்.
கூடிய விரைவில் நேர்மையான நல்லாட்சி நடைபெற உள்ளது. இபிஎஸ் ஆட்சியில் இருந்திருந்தால் கரண்ட் பில் அதிகரித்து இருக்காது. தற்போது அதிகரித்துள்ளது. வீட்டு வரியும் அதிகரித்துள்ளது. அவர் விரைவில் வருவார்.
அதிமுகவில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது விரைவில் முடிவுக்கு வரும். அனைவரும் விரைவில் ஒன்று சேர்ந்து விடுவர் என கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.