MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Madhampatty Rangaraj : டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!

Madhampatty Rangaraj : டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!

Madhampatty Rangaraj Accepts Joy Crizildaa Son : ஜாய் கிரிசில்டாவின் மகனை தன் மகனாக ஏற்றுக் கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்திருக்கிறார். அதன் பின்னணியை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 31 2026, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Madhampatty Rangaraj Accepts Joy Crizildaa Son
Image Credit : Instagram

Madhampatty Rangaraj Accepts Joy Crizildaa Son

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த சர்ச்சை புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்கு பிறகு தனது மகனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக மாதம்பட்டி ரங்கராஜ் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். முன்னதாக, தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதுடன் கர்ப்பமாக்கிவிட்டு விலகிச் சென்றதாக ஜாய் கிரிசல்டா காவல்துறை மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிசில்டா
Image Credit : X

மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிசில்டா

கர்ப்பமாக இருந்த காலம் முழுவதும் பிறக்கவிருந்த குழந்தைக்காக நீதி கேட்டு தொடர்ந்து போராடிய அவர், ஆண் குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கு 'ராகா ரங்கராஜ்' என்று பெயர் சூட்டினார். குழந்தையின் தந்தை யார் என்பது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஜாய் கிரிசல்டா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டிருந்த அறிக்கையில், பரிசோதனையில் குழந்தை தன்னுடையது என்பது உறுதியானால், குழந்தையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்திருந்தார்.

Related Articles

Related image1
Joy Crizildaa: “DNA சோதனைக்கு ஏன் பயந்து ஓடுகிறார்?” – மாதம்பட்டி ரங்கராஜை நோக்கி ஜாய் கிரிசில்டா எழுப்பும் பகீர் கேள்வி!
Related image2
அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!
35
டிஎன்ஏ ரிசல்ட்
Image Credit : Instagram

டிஎன்ஏ ரிசல்ட்

அதன்படி நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனது மகனை கையில் தூக்கி கொஞ்சும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், கடந்த ஆறு மாதங்களாக ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து பொறுப்புகளையும் அன்புடனும் முழு அர்ப்பணிப்புடனும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வாழ்நாள் முழுவதும் மகன் ராகாவின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

45
ஜாய் கிரிசில்டா நெகிழ்ச்சி
Image Credit : x/Joy Crizildaa

ஜாய் கிரிசில்டா நெகிழ்ச்சி

மறுபுறம், ஜாய் கிரிசல்டாவும் அதே புகைப்படத்தை பகிர்ந்து, "உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும். சில போராட்டங்கள் வெற்றிக்காக அல்ல; ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்காக. இன்று ஒரு தாயாக என் மனம் அமைதி அடைந்துள்ளது" என்ற உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள் பதிவாகி வருகின்றன. ஜாய் கிரிசல்டாவின் நீண்டகால போராட்டத்திற்கு இது கிடைத்த நீதி என்று சிலர் பாராட்டி வருகிறார்கள்.

55
நெட்டிசன்கள் கருத்து
Image Credit : JioHotstar/Screenshot

நெட்டிசன்கள் கருத்து

அதே நேரத்தில், இந்த முடிவை மாதம்பட்டி ரங்கராஜ் ஆரம்பத்திலேயே எடுத்திருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது மகனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ள மாதம்பட்டி ரங்கராஜின் இந்த அறிவிப்பால், இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்த சர்ச்சை முடிவுக்கு வருமா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. இதுகுறித்து இருவருமே எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது குக் வித் கோமாளியில் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay TVK Party Success: விஜய்யின் அரசியல் எழுச்சிக்குப் பின்னணியில் யார்? சசிகுமார் கொடுத்த நெற்றிப்பொட்டு பதில்!
Recommended image2
August Release Movies : டிசி முதல் டாக்ஸிக் வரை... ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கப்போகும் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
Breaking News: எஸ்.ஜானகியை தொடர்ந்து காலமான பிரபல பின்னணி பாடகி.! இசையுலகில் அடுத்த பேரிழப்பு.!
Related Stories
Recommended image1
Joy Crizildaa: “DNA சோதனைக்கு ஏன் பயந்து ஓடுகிறார்?” – மாதம்பட்டி ரங்கராஜை நோக்கி ஜாய் கிரிசில்டா எழுப்பும் பகீர் கேள்வி!
Recommended image2
அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved