- Home
- Cinema
- வாஷ் அவுட் ஆகப்போகும் குட் பேட் அக்லி! இந்த வாரம் தியேட்டர் & OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸா?
வாஷ் அவுட் ஆகப்போகும் குட் பேட் அக்லி! இந்த வாரம் தியேட்டர் & OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸா?
வருகிற ஏப்ரல் 24 மற்றும் 25ந் தேதி இரண்டு காமெடி படங்கள் தியேட்டரிலும், இரண்டு முன்னணி ஹீரோஸின் படங்கள் ஓடிடியிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

This Week Theatre and OTT Release Movies : ஏப்ரல் மாதம் 10ந் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆனதால், அதற்கு முந்தைய வாரமும், மறு வாரமும் புதுப்படங்கள் பெரியளவில் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் குட் பேட் அக்லி திரைப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்திற்கு ஆப்பு வைக்க வருகிற ஏப்ரல் 24 மற்றும் 25ந் தேதி இரண்டு காமெடி படங்கள் வருகின்றன. இதுதவிர இந்த வாரம் ஓடிடியிலும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Gangers movie
சுந்தர் சி இயக்கிய கேங்கர்ஸ் (Gangers)
சுந்தர் சி இயக்கத்தில் காமெடி கலாட்டா திரைப்படமாக உருவாகி உள்ளது கேங்கர்ஸ். மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் வெர்ஷனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ள இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 24ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்...பல கெட்டப்புகளில் சுந்தர்சியுடன் காமெடியில் ரணகளம் பண்ணும் வடிவேலு! 'கேங்கர்ஸ்' ட்ரைலர்!
Sumo Movie
அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடித்த சுமோ (Sumo)
அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடிப்பில் உருவான படம் சுமோ. இப்படம் பல வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது ஒருவழியாக வருகிற ஏப்ரல் 25ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ஹோசிமின் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை மற்றும் டயலாக்குகளை சிவா தான் எழுதி உள்ளார்.
Veera Dheera Sooran vs Empuraan
Empuraan vs Veera Dheera Sooran ஓடிடி மோதல்
நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படமும், மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படமும் கடந்த மார்ச் 27ந் தேதி ரம்ஜான் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்து வெற்றிபெற்றது. தியேட்டரில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆன இந்த இரண்டு திரைப்படங்களும் ஓடிடியிலும் போட்டி போட்டு ரிலீஸ் ஆக உள்ளன. எம்புரான் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரிலும், வீர தீர சூரன் 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும் வருகிற ஏப்ரல் 24ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதில் எம்புரான் படத்தை பிருத்விராஜ் சுகுமாரனும், வீர தீர சூரன் படத்தை எஸ்.யு.அருண்குமாரும் இயக்கி இருந்தார்.
இதையும் படியுங்கள்...OTTயிலும் எம்புரானுக்கு போட்டியாக வரும் வீர தீர சூரன் 2! ரிலீஸ் எப்போ?