ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தோல்வியால், இப்படம் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்:
திரை உலகில் தோல்வியே கண்டிடாத இயக்குனர் என பெயர் எடுத்த, இயக்குனர்களில் ஒருவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த நிலையில், சேஞ்சர் திரைப்படம் இயக்குனர் ஷங்கருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்த கேம் சேஞ்சர்:
மேலும் RRR திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இது ராம் சரண் நடிக்கும் திரைப்படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்தனர். ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில் நிலையில், இவருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்தனர். ஓட்டு போடுவதன் அவசியம், கள்ள ஓட்டுகளால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதனை தடுப்பது என சமூக பிரச்னையோடு இந்த படம் எடுக்கப்பட்ட போதிலும், முதல் நாளே கலவையான விமர்சனங்களை இந்த படம் சந்திக்க துவங்கியது.
'தங்கலான்' பட ஹிட் பாடலுக்கு அரை மணிநேரத்தில் டியூன் போட்ட ஜிவி பிரகாஷ்!
400 கோடி ஒர்த் இல்லை என்கிற விமர்சனம்:
படத்தின் கதை கரு மற்றும் கதாபாத்திரம் போன்றவை அருமையாக இருந்தாலும், எப்போதும் ஷங்கர் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய பிரம்மாண்ட காட்சிகள் இப்படத்தில் மிஸ் ஆனது. சிலர் விமர்சன ரீதியாக இந்த படத்தை புகழ்ந்து இருந்தாலும், 400 கோடி செலவு செய்து எடுக்க வேண்டிய அளவிலான படம் இது இல்லை என்பதே ரசிகர்கள் கூறி வந்தனர்.
அதிர்ச்சி தோல்வியில் துவண்ட கேம் சேஞ்சர்:
ஒரு வேலை இந்த படத்தை ஷங்கர் 100 கோடியில் எடுத்திருந்தால் இந்த படம் ஹிட்டு தான். ஆனால் இவர் 400 கோடியில் எடுத்து தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இதுவரை 'கேம் சேஞ்சர்' திரைப்படம் ரூ.150 கோடி வரை மட்டுமே வசூல் செய்து, செலவழித்த பணத்தை கூட மீண்டும் பெறாமல் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.
ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு; கூகுளுக்கு நோட்டீஸ்; நீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?
கேம் சேஞ்சர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ராம்சரண் மற்றும் இயக்குனர் ஷங்கருக்கு மிகப்பெரிய டிசாஸ்டர் தோல்வியாக, இந்த படம் அமைந்ததால், பொங்கல் ரிலீசாக ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தை, ஒரு மாதம் நிறைவடையும் முன்பே ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது, இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்கிய அமேசான் பிரைம் நிறுவனம். அதன்படி, பிப்ரவரி 7-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.