எடுத்தா ரஜினி சாரோட பயோ பிக் தான்; யாரு ஹீரோ தெரியுமா? இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குவது குறித்து இயக்குனர் ஷங்கர் மனம் திறந்து பேசி உள்ளார். அவர் என்ன சொன்னார் தெரியுமா?
Director Shankar
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். ஜெண்டில் மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தனது முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து காதலன் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கிய இந்தியன் படம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
தொடர்ந்து முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து இந்தியாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக மாறினார். எனினும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று பிளாப் படமாக மாறியது.
Director Shankar
இந்த நிலையில் ராம் சரணை வைத்து ஷங்கர் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி உள்ளார். ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசியல் அமைப்பிலிருந்து ஊழலை ஒழிக்கும் நோக்கில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா முக்கிய வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில், அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. மேலும் இந்த இந்தியாவில் மட்டும் ரூ.50 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Director Shankar
இதனிடையே பிரபல டிஜிட்டல் ஊடகத்திற்கு பேட்டியளித்த இயக்குனர் ஷங்கர், வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் தனது ஆர்வம் குறித்து பேசினார். அப்போது “ எனக்கு இதுவரை ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்கும் யோசனை இல்லை, ஆனால் ஒருவேளை நான் பயோபிக் படம் எடுத்தால், அது ரஜினி சாரை பற்றியதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டாரைப் பற்றி ஏற்கனவே மக்களுக்குத் தெரியாததை விட அதிகமாகச் சொல்ல முடியாது என்பதை இயக்குனர் பகிர்ந்து கொண்டார். அவரைப் பற்றியும் அவரது பயணத்தைப் பற்றியும் அனைவருக்கும் தெரியும் என்பதை எடுத்துக்காட்டிய இயக்குனர், ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்குவது பற்றி கேட்டபோது அவரது மனதில் தோன்றியது ரஜினிகாந்தின் பெயர்தான் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
Director Shankar
ரஜினிகாந்தின் கேரக்டருக்கு யார் நடிக்கலா என்று கேட்டபோது, இயக்குனர் நகைச்சுவையாக பதிலளித்தார், " இப்ப தான் ஒரு நிமிடத்திற்கு முன்பு தான் இந்த யோசனையே தோன்றியது. நீங்க கேட்ட உடன் ஸ்பார்க் வந்துள்ளது. ஆனால் அது நடக்குமா என்று பார்ப்போம்." என்று தெரிவித்தார்
சுவாரஸ்யமாக, ரஜினிகாந்த் பற்றிய பயோபிக் படம் எடுக்கப்படுவதாக ஏற்கனவே பல செய்திகள் வந்தன. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய அப்டேட் எதுவும் இல்லாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே போல் நடிகர் தனுஷும் ஒருமுறை ரஜினிகாந்த் பற்றி பயோபிக் படத்தை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார்.
Coolie
மறுபுறம், ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் இந்த ஆண்டு மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.