இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் இவர் தானா? காதலன் புகைப்படத்தை ஷேர் செய்து ட்விஸ்ட் வைத்த நடிகை!
நடிகை இலியானா, சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்ததில் இருந்து, ரசிகர்கள் அனைவரும் உங்கள் காதலர் யார் என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய காதலரின் புகைப்படத்தை முதல் முறையாக ஷேர் செய்து ட்விஸ்ட் வைத்துள்ளார் இலியானா.
திரை உலகைச் சேர்ந்த நடிகைகள் சிலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வெளிநாட்டவர்களை போல் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்கின்றனர். அந்த வகையில் ஏற்கனவே நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பின்னர் தன்னுடைய காதலனை பிரேக் அப் செய்து விட்டு, தற்போது வேறு ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறார்.
Ileana DCruz
நடிகை எமி ஜாக்சனை போலவே, திருமணத்திற்கு முன்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார் நடிகை இலியானா. சமீபத்தில் தாயாக போகும் தகவலை வித்தியாசமான முறையில் தன்னுடைய சமூக வலைதளத்தில் அறிவித்தார். இது உண்மை என்று நம்ப முடியாத ரசிகர்கள் பலர், படத்தின் புரமோஷனா? என்பது போல் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதன் பின்னர், ரசிகர்கள் நம்பும் வகையில் தன்னுடைய பேபி பம்ப் புகைப்படங்களை ஷேர் செய்ய துவங்கினார் இலியானா. எனவே குழந்தைக்கு காரணமானவர் யார் என்று? ரசிகர்கள் பலர் தொடர்ந்து இலியானாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் இந்த கேள்விக்கு, விரைவில் இலியானா தரப்பில் இருந்து பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... தற்போது தன்னுடைய காதலரின் புகைப்படத்தையே ஷேர் செய்து ட்விஸ்ட் ஒன்றையும் வைத்துள்ளார்.
தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இலியானா வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் அவருடைய காதலரின் முகம் முழுவதும் தெளிவாக தெரியவில்லை. எனவே அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்து, அவர் பிரபலமா இல்லையா என்பது குறித்து ஆராய துவங்கி உள்ளனர் ரசிகர்கள்.
மேலும் தன்னுடைய கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வரும் இலியானா, தன்னுடைய காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு, போட்டுள்ள பதிவில், "கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான ஆசீர்வாதம். இதனை அனுபவிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருப்பேன் என நினைக்கவில்லை. எனவே இந்த பயணத்தில் நான் ஒரு நம்ப முடியாத அதிர்ஷ்டசாலி என கருதுகிறேன். உங்களுக்குள் வளரும் ஒரு வாழ்க்கை உணர்வானது, எவ்வளவு இனிமையானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. பெரும்பால நாட்களில், நான் என் பேபி பம்பை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். விரைவாக உன்னை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விவரிக்க முடியாத அளவுக்கு சில நாட்கள் கடினமானவை. என்னை நம்பிக்கை அற்றதாக உணர்த்துகிறது. நான் நன்றி உள்ளவளாக இருக்க வேண்டும். அற்பமான விஷயத்திற்கு அழக்கூடாது. நான் வலுவாக இருக்க வேண்டும். எனக்கு வலிமை இல்லை என்றால், நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன். மேலும் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் நான் இந்த குழந்தையை அதிகம் நேசிக்கிறேன். என மிகவும் உணர்வு பூர்வமாக தெரிவித்துள்ளார்.