இப்படி ஏமாத்திட்டீங்களே... பொன்னியின் செல்வன் படக்குழு செய்த செயலால் அப்செட் ஆன ரசிகர்கள்
பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தாமதம் ஆனதால் கோபமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படக்குழுவை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குனர்கள் மிஷ்கின், ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தை 3 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ள இப்படத்திற்கு இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு ஏற்றார் போல் படத்தையும் படக்குழு பிரம்மாண்டமாக புரமோட் செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்... ‘பொன்னியின் செல்வன்’ குந்தவையை போல்... பிங்க் நிற புடவையில் பேரழகியாக வந்த திரிஷா... வைரலாகும் கியூட் கிளிக்ஸ்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டிரைலரும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் 6 மணிக்கே டிரைலர் வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். பின்னர் 9 மணிக்கு தான் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால் 9 மணிக்கு டிரைலர் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் படக்குழுவை கடுமையாக சாடி வருகின்றனர். சொன்ன நேரத்தில் சரியாக டிரைலரை வெளியிட மாட்டீர்களா, எவ்வளவு நேரம் காத்திருப்பது என லைகா நிறுவனத்தை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஒரு சிலரோ, டிரைலர் எங்கடா, சோதிக்காதீங்க என்றெல்லாம் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இது அல்லவா குரு மரியாதை... மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.