செல்வராகவனை டம்மியாக்கிய நெல்சன்?...மீம்ஸுகளால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பீஸ்ட் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கவுள்ளார் என கூறிவந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் செல்வராகவனை மீம்ஸாக மாற்றியுள்ளது.

Beast
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக பீஸ்டில் தவிஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதுதவிர ரெடின் கிங்ஸ்லி, டான்ஸர் சதீஷ், செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.
Beast
பீஸ்ட் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ஹிட் அடித்தன அதிலும் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து போதிய சாதனை படைத்தது. இதையடுத்து விஜய் குரலில் ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானது.
Beast
வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...vijay : அதான் 4 கார் இருக்குல்ல, சைக்கிள ஏன் எடுத்துட்டு போனீங்க! நெல்சனின் கேள்விக்கு விஜய் சொன்ன 'நச்' பதில்
Beast
பீஸ்ட் படத்தின் டிரைலர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அதன்படி வீரராகவன் என்னும் பெயரில் இருக்கும் விஜய் தீவிரவாதிகளால் ஹைஜெக் செய்யப்பட்ட மாலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் அதிரடி காட்சிகள் இருந்தன.
beast
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அந்த டிரைலர் யூடியூப்பில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ட்ரைலர் வெளியான 5 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் அறிவித்தது.
selvaraghavan
முன்னதாக பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராக என்ட்ரியான இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தில் மாஸ் வில்லனாக நடிக்கவுள்ளார் என சொல்லப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு...Vijay : குட்டி ஸ்டோரி ஸ்டாக் இல்ல நெல்சா.... ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் விஜய் கலகல பேச்சு- வைரலாகும் புரோமோ
selvaraghavan
தம்பியான தனுஷை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்த செல்வராகவன், நடிகராக பீஸ்ட் மற்றும் சாணிக்காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் இவர் நாயகனாக நடித்துள்ள சாணிக்காகிதம் விரைவில் வெளியாகவுள்ளது.
beast
இந்நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் ட்ரைலர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை சுக்குநூறாக்கி உள்ளதாக ட்வீட் செய்து வருகின்றனர். அதாவது வில்லன் என சொல்லப்பட்ட செல்வராகவன் உண்மையில் விஜய்க்கு பில்டப் கொடுக்கும் ஆஃபீசராக நடித்துள்ளது ட்ரைலர் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.