ஒரு படம் பிளாப் ஆனா இப்படியா அவமானப்படுத்துவீங்க... பிரபல ஓடிடி நிறுவனத்தின் செயலால் கடுப்பான சமந்தா ரசிகர்கள்
சமந்தா நடித்த சாகுந்தலம் படம் பிளாப் ஆன நிலையில், அப்படத்தை வெளியிட்ட ஓடிடி நிறுவனம் அதனை தரக்குறைவாக கையாண்டுள்ளதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு இயக்குனர் குணசேகரன் இயக்கிய சரித்திர திரைப்படம் சாகுந்தாலம். இதில் நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்க, அல்லு அர்ஜுனின் மகள் ஆர்ஹா மற்றும் அருவி பட நடிகை அதிதி பாலன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை நீலிமா குணா உடன் இணைந்து தில் ராஜுவும் தயாரித்து இருந்தார்.
சாகுந்தலம் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் மோசமான திரைக்கதை காரணமாக படுதோல்வியை சந்தித்தது. ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.10 கோடி கூட வசூலிக்கவில்லை. இதனால் சமந்தாவின் கெரியரில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்த படமாக இது அமைந்தது. இப்படத்தால் தான் பேரிழப்பை சந்தித்ததாக தயாரிப்பாளர் தில் ராஜுவும் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... பிளஸ் 2 பொதுத்தேர்வில்... தோற்று வெல்பவர்க்கும் பரிசு தருவேன் - கவிஞர் வைரமுத்து அறிவிப்பு
படுதோல்வி அடைந்த சாகுந்தலம் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. வழக்கமாக ஏதேனும் படம் ஓடிடியில் வெளியிடப்பட்டால், அதனை முன்கூட்டியே அறிவித்து, அதற்காக டிரைலர் வெளியிட்டு பின்னர் தான் ரிலீஸ் செய்வார்கள். ஆனால் சாகுந்தலம் படத்தை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஓடிடியில் எனோ தானோ என ரிலீஸ் செய்துள்ளது சமந்தா ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
அதுமட்டுமின்றி இப்படம் வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டு போடப்பட்டுள்ள டுவிட்டில் நடிகை சமந்தாவின் பெயரை குறிப்பிடாமல் புறக்கணித்து உள்ளனர். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் ஒரு படம் பிளாப் ஆனால் அந்த நடிகையை இப்படியா அவமானப்படுத்துவீர்கள் என சாடி வருகின்றனர். சாகுந்தலம் படத்தை ரிலீசுக்கு முன்பே அமேசான் நிறுவனம் ரூ.20 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சோழர்களின் பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுத்த பாண்டியர்களின் ‘யாத்திசை’ படம் இப்போ ஓடிடிக்கு வந்தாச்சு