பிளஸ் 2 பொதுத்தேர்வில்... தோற்று வெல்பவர்க்கும் பரிசு தருவேன் - கவிஞர் வைரமுத்து அறிவிப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு தங்க்பேனா பரிசளித்த வைரமுத்து, அதில் தோற்று வெல்பவர்களுக்கும் பரிசு தருவேன் என கூறி உள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி என்கிற அரசுப் பள்ளி மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருந்தார். நந்தினி இந்த சாதனையை பாராட்டும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி வரை பல்வேறு விவிஐபிக்கள் அவரை நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தனர்.
அந்த வகையில் மாணவி நந்தினி இந்த சாதனையை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்த கவிஞர் வைரமுத்து, அவருக்கு தங்கப்பேனாவை பரிசாக அளிப்பேன் என்றும் கூறி இருந்தார். அவர் சொன்னபடியே நேற்று திண்டுக்கல்லில் உள்ள மாணவி நந்தினியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து மாணவிக்கு தங்கப்பேனாவை பரிசாக வழங்கினார்.
இதையும் படியுங்கள்... பிளஸ் 2-வில் 600க்கு 600 எடுத்த நந்தினியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து தங்கப்பேனா பரிசளித்த வைரமுத்து
திண்டுக்கல்லுக்கு சென்றது குறித்து இன்று டுவிட்டரில் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது :
“திண்டுக்கல்
ஏழை வீடு
எளிய குடில்
எட்டுக்கெட்டு அறை
இங்கிருந்து வென்ற
நந்தினிக்குத்தான்
தங்கப் பேனா சேர்கிறது
பட்ட பாடுகளை
பெற்ற வெற்றிகளைப்
பள்ளிகளுக்குச் சென்று
சொல்லிக்கொடு மகளே
வெற்றியைத் தாண்டித்
தோற்றவர்களைத்
தத்தெடுங்கள் ஆசிரியர்களே
தோற்று வெல்பவர்க்கும்
பரிசு தருவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... சோழர்களின் பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுத்த பாண்டியர்களின் ‘யாத்திசை’ படம் இப்போ ஓடிடிக்கு வந்தாச்சு