MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "ஹீரோ எவ்வளவு சொல்லியும் கேட்கல" மிஷ்கினின் ஓவர் கான்ஃபிடன்சால் பிளாப் ஆனா படம் - வருந்திய பிரபலம்!

"ஹீரோ எவ்வளவு சொல்லியும் கேட்கல" மிஷ்கினின் ஓவர் கான்ஃபிடன்சால் பிளாப் ஆனா படம் - வருந்திய பிரபலம்!

Director Mysskin : தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் மிஸ்கின். இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறியிருக்கிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 01 2024, 10:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mysskin

Mysskin

சென்னையில் பிறந்து வளர்ந்து, சினிமா ஆசியோடு வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சண்முகராஜா என்கின்ற மிஷ்கின். பிரபல நாவல் ஒன்றில் வரும் "இளவரசன் மிஷ்கினின்" கதாபாத்திரத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தன்னுடைய பெயரையும் "மிஷ்கின்" என்று மாற்றிக் கொண்டார் சண்முகராஜா. தொடக்க காலத்தில் புத்தகக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த அவர், பிரபல இயக்குனர் வின்சென்ட் சிவா இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான "யூத்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். 

அதன்பிறகு வின்சென்ட் செல்வா இயக்கிய "ஜித்தன்" என்கின்ற திரைப்படத்திலும் அவருக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். "ஜித்தன்" திரைப்படம் 2005ம் ஆண்டு வெளியான நிலையில், 2006ம் ஆண்டு தமிழில் வெளியான "சித்திரம் பேசுதடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை இயக்குனராக தொடங்கிய அவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை அம்சத்தை தமிழ் திரையுள்ளதற்கு கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்.

இரவின் நிழல் நாயகி பிரிகிடா சாகாவின் 'திமிருக்காரியே' வெளியிட்ட சுதா கொங்கரா !

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Director Mysskin

Director Mysskin

தொடர்ச்சியாக "அஞ்சாதே", "நந்தலாலா", "யுத்தம் செய்" போன்ற திரைப்படங்கள் மிஷினுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. நடிகனாகவும் தன்னை தொடக்கத்தில் இருந்தே நிலைநிறுத்திக் கொண்டு வரும் மிஷ்கின், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி, நடித்து அவரே தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக வெளியான "பிசாசு", "துப்பறிவாளன்" மற்றும் "சைக்கோ" உள்ளிட்ட படங்களும் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

கடந்த 18 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலையில் இவர் பயணித்து வந்தாலும் குறைந்த அளவிலான திரைப்படங்களையே எடுத்திருக்கிறார். இருப்பினும் அவை அனைத்துமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் "தியாகராஜன் குமாரராஜா" இயக்கிய "சூப்பர் டீலக்ஸ்" என்ற திரைப்படத்தில் நடிகர் மிஸ்டின் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் வைரலானது.

34
Mysskin Movies

Mysskin Movies

தொடர்ச்சியாக "மாவீரன்" மற்றும் "லியோ" உள்ளிட்ட திரைப்படங்களிலும் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை அவர் வெளிப்படுத்தினார். இப்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதியை வைத்து "ட்ரெயின்" என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான தனஞ்செயன் அண்மையில் பங்கேற்ற ஒரு பேட்டியில் இயக்குனர் மிஷ்கினுடன் பயணித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். 

கடந்த 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "முகமூடி". இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் மிஷ்கின். ஆனால் "முகமூடி" படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தனக்கு அந்த அளவுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ஜீவாவே நேரடியாக தனஞ்செயனிடம் பேசி இருக்கிறார். மறைமுகமாகவும் பலமுறை மிஸ்கினிடம் அது பற்றி பேசி இருக்கிறார். இருப்பினும் அந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எண்ணி தொடர்ச்சியாக தன்னுடைய எண்ணப்படியே நடந்திருக்கிறார் மிஷ்கின்.

44
Mugamoodi

Mugamoodi

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன் "நான் மிஷ்கினிடம் எத்தனையோ முறை இந்த கிளைமாக்ஸ் கட்சியை சற்று மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினேன். நடிகர் ஜீவா அவர்களும் அந்த கிளைமாக்ஸ் கட்சியில் தனக்கு பெரிய அளவில் உடன்பாடு இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் முகமூடி படத்திற்கு முன்னதாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்ததால் கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்சூடன் அந்த திரைப்படத்தை அவருடைய பாணியில் மட்டுமே எடுக்க வேண்டும் என்று கூறி. அந்த கிளைமாக்ஸ் கட்சியை மாற்றாமல் அதை வெளியிட்டார். ஆனால் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை" என்று வருத்தப்பட்டுள்ளார் தனஞ்செயன்.

3 கதாநாயகிகளை கிண்டல் செய்து பாட்டு எழுதிய கண்ணதாசன்! சண்டைக்கு போன ஜெயலலிதாவின் தாய்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved