3 கதாநாயகிகளை கிண்டல் செய்து பாட்டு எழுதிய கண்ணதாசன்! சண்டைக்கு போன ஜெயலலிதாவின் தாய்!
பாடல் எழுதுவதில் வாலிக்கு முன்னோடியான கவிஞர் கண்ணதாசன், ஒரு சில பாடல்களில் அந்த பாட்டில் இடம்பெறும் நடிகைகளையே கிண்டல் செய்யும் அளவுக்கு குசும்புக்காரர். அப்படி எழுதப்பட்ட 3 பாடல்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
Kannadasan
கண்ணதாசனை பொறுத்தவரை, வாழ்க்கையில் சந்திக்கும் சில சம்பவங்களை அப்படியே ஒரு பாடலாக மாற்ற கூடியவர். அந்த வகையில் மூன்று நடிகைகள் பற்றி எழுந்த விமர்சனத்தை அப்படியே பாடலின் கொண்டு வந்து, அந்த பாடல்களை சூப்பர் ஹிட்டாகவும் மாற்றியுள்ளார். மேலும் இவர் எழுதிய வரிகளை மேலோட்டமாக பார்த்தால் அந்த கதைக்கு பொருத்தி எழுதியது போல் இருந்தாலும், உற்று நோக்கினால் அதில் ஹீரோயின்களை எப்படி கிண்டல் செய்து... வம்பிழுத்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
Annai Illam
இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில், 1963 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'அன்னை இல்லம்'. இந்த படத்தில், சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்க, தேவிகா கதாநாயகியாக நடித்திருப்பார். 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை செய்த இந்த படத்தில், ஹீரோயினாக நடித்த, நடிகை தேவிகாவின் வாக்கிங் ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் சில விமர்சனங்களுக்கு ஆளான நிலையில்... அதை அப்படியே... கண்ணதாசன் தன்னுடைய பாடலில் இடம்பெற வைத்தார். தேவிகாவின் நடையை விமர்சனம் செய்யும் விதமாக அவர் எழுதிய பாடல் தான் சிவாஜி தேவிகாவை பார்த்து பாடும் 'நடையா.. இது நடையா.. ஒரு நாடக மன்றோ நடக்குது" என்று துவங்கும் பாடல்.
பிகினி உடையில் பிக்பாஸ் பிரபலத்துக்கு புரபோஸ்; வனிதாவின் 4வது கணவர் இவரா?
Enga Ooru Raja
இதைத் தொடர்ந்து, இயக்குனர் பி.மாதவன் 1968-ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் 'எங்க ஊர் ராஜா'. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சவுகார் ஜானகி, எம்.என்.நம்பியார் உள்ளிட்ட பலர் பலர் நடித்திருந்தனர். கதாநாயகன் சிவாஜி கணேசன், ஜெயலலிதாவை சமாதானம் செய்து... உன் வீட்டுக்கு பெண் பார்க்க வருவேன் என்பதை கிண்டலாக ஜெயலலிதாவிடம் பாடல் மூலம் கூறுவார்.
இந்த படத்தில் ஜெயலலிதா நடிக்கும் போது குண்டாக இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்ததால், லிட்ரலாக ஜெயலலிதாவை கலாய்த்து இந்த பாடலை கண்ணதாசன் எழுதி இருந்தார். அந்த பாடல் தான் "மண்டோதரி.. குண்டோதரி.. வாடாமணி.. சூடாமணி.. பெண்பார்க்க வருவேனடி என சிவாஜி கணேசன் பாடுவது போல் இருக்கும் பாடல் வரிகள். ஜெயலலிதாவுக்கு படத்தில் நடிக்கும் போது சரியாக புரியவில்லை என்றாலும், படத்தின் ரிலீஸுக்கு பிறகு இந்த பாடல் தன்னுடைய பெண்ணை கிண்டல் செய்து எழுதப்பட்ட பாடல் என்பதை அறிந்து, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா படத்தின் இயக்குனர் மாதவனிடம் சண்டைக்கு போனாராம். இப்படி ஒரு பாடலை வைத்து தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக எண்ணி, இனி மாதவன் இயக்கத்தில் நடிக்கவே கூடாது என ஜெயலலிதா முடிவு செய்தாராம்.
Panama Paasama:
அதேபோல் சரோஜா தேதியையும், விட்டு வைக்காமல் தன்னுடைய பாடலில் கிண்டல் செய்துள்ளார் கண்ணதாசன். சரோஜாதேவி தன்னுடைய கெரியரில் பீக்கில் இருந்தபோது, 1967ல் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திருமணமான ஒரே வருடத்தில், கே.எஸ்.கோபி கிருஷ்ணன் இயக்கத்தில் 1968-ஆம் ஆண்டு வெளியான 'பணமா பாசமா' படத்தின் மீண்டும் நடிக்க வந்தார்.
ஜெமினி கணேசன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், சரோஜா தேவி கதாநாயகியாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் மறுபடியும் நடிக்க வந்ததால், இதை சரோஜாதேவியின் பாட்டிலேயே எழுதினார் கண்ணதாசன். அதுதான் 'மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ.. என்கிற பாடல்". இந்த மூன்று பாடல்களுமே ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அச்சச்சோ.. ஒருவேளை பயில்வான் சொன்னது உண்மை தான் போல! ஆர்த்தி சமாதான பேச்சுவார்த்தையின் பின்னணி!