MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அச்சச்சோ.. ஒருவேளை பயில்வான் சொன்னது உண்மை தான் போல! ஆர்த்தி சமாதான பேச்சுவார்த்தையின் பின்னணி!

அச்சச்சோ.. ஒருவேளை பயில்வான் சொன்னது உண்மை தான் போல! ஆர்த்தி சமாதான பேச்சுவார்த்தையின் பின்னணி!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்கும் விதமாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், தற்போது பயில்வான் பேட்டி ஒன்றில் கூறிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

4 Min read
manimegalai a
Published : Oct 01 2024, 12:30 PM IST| Updated : Oct 01 2024, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jayam ravi Statement

Jayam ravi Statement

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பல இளம் நடிகர்கள், வந்த வேகத்தில் காணாமல் போகிறார்கள். அதர்வா, விக்ரம் பிரபு, போன்ற வாரிசு நடிகர்கள் கூட தற்போது வரை தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் பிரபல இயக்குனர் மோகனின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் ஜெயம் ரவி.

ஜெயம் ரவியின் வளர்ச்சிக்கு இவருடைய குடும்பத்தின் ஆதரவும், அண்ணன் மோகன் ராஜாவின் பங்களிப்பும் மிக முக்கியமானது. தன்னுடைய தம்பி ஜெயம் ரவியை முன்னணி இடத்தை நோக்கி நகர்த்தி வந்தது மோகன் ராஜா தான். இவர் தன்னுடைய தம்பி ஜெயம் ரவியை வைத்து இயக்கிய, ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, போன்ற படங்கள் ரீமேக் படங்கள் என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஜெயம் ரவிக்கு தமிழ் சினிமாவில் நிலையான ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க உதவியது.

25
Jayam Ravi And Aarti

Jayam Ravi And Aarti

கல்லூரியை முடித்த உடனேயே, தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய காதலி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆவார். ஆர்த்தி - ஜெயம் ரவிக்கு திருமணம் ஆகி தற்போது 15 வருடங்கள் ஆகும் நிலையில், இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்கிற இரு மகன்கள் உள்ளனர்.

மனைவியின் ஆசை; 175 ஏக்கர் நிலத்தால் ஜெயிலுக்கு போய்.. கேரியரையே இழந்த சுமன்.!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி, தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறி,  இந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த முடிவு குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆர்த்திக்கு முன்பே முந்திக்கொண்டு ஜெயம் ரவி இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், ஆர்த்தி தரப்பில் இருந்து இந்த தகவல் மறுக்கப்பட்டது. மேலும் தன் மீது களங்கம் விளைவிக்கும் விதமாக சில பேச்சுகள் அடிபட்டதால், தன்னுடைய தரப்பில் இருந்து அறிக்கை மூலம் விளக்கம் கொடுக்க முடிவு செய்ததாக ஆர்த்தி தெரிவித்திருந்தார். அதேபோல் ஜெயம் ரவி, தன்னிடம் கலந்து ஆலோசித்து விவாகரத்து முடிவை எடுக்கவில்லை என்றும், கணவர் ரவியை  சந்திக்க முயற்சி செய்தபோது, அவரை சந்திக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் ஆர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

35
Jayam Ravi and Aarti

Jayam Ravi and Aarti

இதை தொடர்ந்து ஜெயம் ரவிக்கும், பிரபல பாடகி கெனிஷா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தான் ஜெயம் ரவி - ஆர்த்தியின் விவாகரத்துக்கான காரணம் என கூறப்பட்டது. பிரதர் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இந்த தகவலை முற்றிலும் மறுத்த ஜெயம் ரவி, கெனிஷா தன்னுடைய தோழி என்றும், அவர் மிகவும் கஷ்டப்பட்டு வளர்தவர். அவரை தன்னுடன் இணைத்து பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் ஆர்த்தி குறித்து ஜெயம் ரவி கூறிய பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல கோடி சம்பாதித்தாலும் தன்னுடைய கை செலவுக்கு கூட ஆர்த்தியை எதிர்பார்த்து தான் வாழ்ந்து வருவதாகவும், பலமுறை வீட்டு வேலைக்காரர்கள் முன்பே ஆர்த்தி அசிங்கப்படுத்தி உள்ளதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் ஜெயம் ரவியை சந்தித்து பேசிய போது அவர் கூறிய சில தகவல்களை பிரபல youtube சேனலில் பகிர்ந்திருந்தார். அந்த பேட்டியின் போது, 'ஜெயம் ரவி பல விஷயங்களை சொல்ல மறுப்பதாகவும், ஆர்த்தியின் மூலம் தனக்கு பல மோசமான சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறினார். ஆனால் தன்னுடைய குழந்தைகளின் நல்வாழ்க்கை தான் தனக்கு முக்கியம்.  இதன் காரணமாக ஆர்த்தி பற்றி எதுவும் பேச விருப்பமில்லை என ஜெயம் ரவி கூறியதாக தெரிவித்தார்.

45
Jayam Ravi and Aarti

Jayam Ravi and Aarti

ஜெயம் ரவி சம்பாதித்த பண முழுவதும் அவருடைய மாமியார் மற்றும் மனைவி ஆர்த்தியிடம் தான் உள்ளது. ரவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட ஆர்த்தி முடக்கி விட்டார். ஜெயம் ரவிக்கு சொந்த பேங்க் அக்கௌன்ட் கூட கிடையாது. அவரது உடமைகள் அனைத்தும் ஆர்த்தியிடம் தான் உள்ளது. ஜெயம் ரவி தரப்பில் இருந்து, இரண்டு முறை விவாகரத்து நோட்டஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் முறையாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட போது, சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவியின் தந்தையிடம் சென்று பேசினார். அப்போது ஜெயம் ரவி தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அவரால் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து மௌனமாக சென்றுவிட்டார்.

எனவே விவாகரத்து நோட்டீஸ் ஆர்த்திக்கு தெரியாமல் அனுப்பப்பட்டது கிடையாது என்பதை உறுதி செய்தார். ஆனால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பின்னர் ஆர்த்தி சந்தித்து பேச முயன்றார் என்பது உண்மை. ஆனால் ஜெயம் ரவி சந்திக்க வில்லை. இதற்க்கு காரணம் பொருளாதாரம் தான். ஜெயம் ரவி கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் குடும்பத்தை பொறுத்தவரை... சுஜாதாவிற்கு ஒரு பங்களா தான் உள்ளது. அதில் 5திற்கும் மேற்ப்பட்ட கேஸ் போடப்பட்டுள்ளது. மாமனார் வீட்டில் தான் உள்ளார். எப்போதாவது வெளிநாட்டு கார் விற்பனை செய்தால் தான் அவருக்கு கமிஷன் கிடைக்கும். 

வைரமுத்துவை மிஞ்சிய மகன்; Palindrome வார்த்தைகளை பயன்படுத்தி மதன் கார்க்கி எழுதி ஆச்சர்ய பாடல்!

55
Jayam Ravi and Aarti

Jayam Ravi and Aarti

மற்றபடி, ஜெயம் ரவி தான் தங்க முட்டையிடும் வாத்தாக இருந்தார். அவரை பிரிந்தால் பொருளாதார ரீதியாக நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதால் கூட ஆர்த்தி பேச முயற்சி செய்திருக்கலாம் என கூறினார். இதை சுட்டி காட்டி சிலர்... ஜெயம் ரவியுடன் மீண்டும் ஆர்த்தி சேர்ந்து வாழ சமாதான பேச்சு வார்த்தையை முன்னெடுப்பது இதற்க்கு தானா? என சந்தேக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். மனதளவில் மிகவும் உடைந்து போய் இருக்கும் ஜெயம் ரவி... தன்னுடைய மகன் மீண்டும் அப்பா - அம்மா சேர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்பட்ட போது கூட முடியாது என மறுத்து விட்ட நிலையில்... மீண்டும் ஆர்த்தியுடன் சேர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜெயம் ரவி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved