யூடியூப் மூலம் பவி டீச்சராக பிரபலமாகி, சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் பிரிகிடா சாகா நடித்துள்ள இண்டிபெண்டெண்ட் ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தமிழ் சினிமா பாடல்களுக்கு நிகராக, இண்டிபெண்டெண்ட் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் ஏராளமான இண்டிபெண்டெண்ட் பாடல்கள் வெளியாகி, யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தது.

இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளது தான் இரவின் நிழல் படத்தில், பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்து... மாயாவா... தூயவா என்கிற பாடல் மூலம் மனதை மயக்கிய பிரிகிடா சாகா, நடனத்தில் தெறிக்க விட்டுள்ள 'திமிருக்காரியே' ஆல்பம் பாடல். கலர் ஃபுல்லாக ஒரு கோவில் திருவிழா பின்னணியில் உருவாகியுள்ள இந்த பாடல், சிறுசுகள் முதல் இளசுகள் மனதையும் கொள்ளையடித்துள்ளது.

3 கதாநாயகிகளை கிண்டல் செய்து பாட்டு எழுதிய கண்ணதாசன்! சண்டைக்கு போன ஜெயலலிதாவின் தாய்!

மேலும் இந்த அழகிய பாடலை வெளியிட்டு, இந்த பாடலுக்கு கூடுதல் வரவேற்பை பெற்று தந்துள்ளார், இறுதி சுற்று, சூரரை போற்று போன்ற படங்களை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா. ஏ.கே. சசிதரன் இசமையமைத்துள்ள இந்தப் பாடலை, பிரபல நாட்டுப்புற பாடகர் அந்தோனி தாசன் பாடியுள்ளார். பிரிகிடா சாகாவுடன் இணைந்து இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு கலகலப்பை கூறியுள்ளார் பிரபல யூடியூபர் டிரெண்டிங் தீவிரவாதி கௌதம். இந்த ஆல்பம் பாடலை ருத்ரா ஜித் என்பவர் தான் இயக்கி உள்ளார்.

12 வயது மகளின் குற்றச்சாட்டு; 'இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்' கூனி குறுகிய நடிகர் பாலா!

இந்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பாடல் மீது ரசிகர்களுக்கு ஒரு வித எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதனை நிறைவேற்றும் விதமாக பாடலும் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த பாடலில், ஸ்ரீதர் மாஸ்டரின் நடன அசைவுகள் ரசிகர்களையே துள்ளி குதித்து ஆட்டம் போட வைக்கும் விதத்தில் உள்ளது. கண்டிப்பாக இப்பாடல், எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த பாடலாக இருக்கும் என 
இந்தப் பாடலை தயாரித்துள்ள டிரெண்டிங் தீவிரவாதி கௌதம் புரொடெக்ஷன்ஸ் மற்றும் செந்தில்குமார் சரிதா சார்பில் எஸ்.எஸ். அன்ட் கோ நிறுவனம் தெரிவித்துள்ளனர்.Thimirukaariye Music Video | Goutham | Brigida saga | A.K.Sasidaran | Anthony daasan | Rudhra jith