“சில்க் ஸ்மிதாவின் இறந்த உடலை கூட விடல.. பல நாட்கள் நடந்த கொடுமை..” பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்....
அன்றைய காலக்கட்டத்தில் உருவான எல்லா தமிழ் படங்களில் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்க்கு தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர்.
Tamil Actress Silk Smitha
சில்க் ஸ்மிதா.. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை.. சில ஆண்டுகளே திரையில் நடித்திருந்தாலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை கொண்டாடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் பிறந்த சில்க் ஸ்மிதாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. சிறுவயதிலேயே திருமணமாகி மண முறிவு ஏற்பட்ட நிலையில் நடிகையாக வேண்டும் என்று கனவுடன் சென்னைக்கு வந்தார்.
Silk Smitha
ஆனால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால், ஒரு வீட்டில் வீட்டு வேலை பார்த்து கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவை பார்த்த இயக்குனர் விணு சக்ரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் படத்தில் சாராய வியாபாரியாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் அவரின் கேரக்டர் பெயர் சில்க். பின்னர் தனது பெயரை ஸ்மிதா என்று மாற்றிய அவர் தனது முதல் கேரக்டரான சில்க் என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டார்.
Actress Silk Smitha
முதல் படத்திற்கு பின்னர் சில்க் ஸ்மிதாவிற்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. டஸ்கி நிறம், சொக்க வைக்கும் கண்கள், கொஞ்சி பேசும் பேச்சு என புகழின் உச்சிக்கு சென்றார். சில்க் ஸ்மிதாவின் பாட்டு இருந்தால் அந்த படம் ஹிட் என்று கூறி, அன்றைய காலக்கட்டத்தில் உருவான எல்லா தமிழ் படங்களில் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்க்கு தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். இதனால் குறுகிய காலத்திலேயே 400-க்கும் மேற்பட்ட படங்களில் சில்க் ஸ்மிதா நடித்தார்.
ஆனால் சில்கின் தனிப்பட்ட வாழ்க்கை மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. ஆம்.. புகழின் உச்சியில் இருந்த ஸ்லிக் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். ஆனால் சில்க் தற்கொலை செய்யும் ஆளே கிடையாது அவரை கொலை செய்திருக்கலாம் என்று அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். சில்க் ஸ்மிதா மறைந்து 27 ஆண்டுகள் ஆனாலும், லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்படும் பிரபல நடன அமைப்பாளர் புலியூர் சரோஜா சில்க் குறித்து சொன்ன கருத்துகள் மீண்டும் வைரலாகி வருகின்றன. பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த புலியூர் சரோஜா, ஒருமுறை சில்க் தன்னிடம் வந்து, நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் எண்றும், கல்யாணத்தை நீங்கள் தான் முன்னின்று நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்த ஒரு வாரத்திலேயே சில்க் இறந்துவிட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “ சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி தெரிந்த உடனே, நான் பிணம் மாதிரி ஆகிவிட்டேன்.. உடனடியாக அவரின் உடலை பார்க்க சென்றோம்.. எங்களால் அவளின் பார்க்கவே முடியவில்லை.. அவ்வளவு கஷ்டமாக இருந்தது என்றும் கண்னீருடன் கூறினார். அந்த இடத்தில் ஒரு 5 பேர் கூட இல்லை.
silk smitha remembrance
ஆடை இல்லாமல் மோசமான நிலையில் சில்க்கின் உடலை பார்த்தேன்.., அவர் இறந்த பின்பும் அங்கேயும் அவரையும் ஏதோ செய்துவிட்டார்கள். சில்க் ஸ்மிதா கண்டிப்பா தற்கொலை செய்திருக்க மாட்டாள்.. அவள் இறந்த பின்பு 10 நாள் தன்னால் தூங்க முடியவில்லை.. அவளை யார் எது செய்திருந்தாலும் அவர்கள் நல்லாவே இருக்கமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
சில்க் ஸ்மிதா இறந்த சமயத்தில் அவர் மரணத்தை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்னம் இருந்தது. முக்கிய அரசியல் புள்ளிகள். உச்சத்தில் இருந்த திரை நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
மேலும் சில்கின் இறந்த உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்த போது, பிணவரை ஊழியர்களே மற்றவர்கள் அவரின் உடலை பாலியல் வன்கொடுமை செய்தததாகவும் தகவல் வெளியானது. நீண்ட நாட்கள் இந்த கொடுமை அரங்கேறியது என்று அன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரவியது. தற்போது அதையே தான் புலியூர் சரோஜா உறுதிப்படுத்தி உள்ளார். சில்க்கின் நெருங்கிய தோழியான அனுராதாவும் இதே தகவலை கூறியிருந்தார். ஆனால் சில்க்கின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்ற உண்மையும் அவருடன் சேர்ந்தே மறைந்துவிட்டது.