- Home
- Cinema
- பிறந்தநாள் ஸ்பெஷல்..'வேட்டையன்' படப்பிடிப்பில் 2 சூப்பர் ஸ்டாருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பகத் ஃபாசில்
பிறந்தநாள் ஸ்பெஷல்..'வேட்டையன்' படப்பிடிப்பில் 2 சூப்பர் ஸ்டாருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பகத் ஃபாசில்
இன்று தன்னுடைய 42 வது பிறந்த நாளை கொண்டாடும், ஃபகத் ஃபாசில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனுடன் 'வேட்டையன்' படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட, அது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
மலையாள திரை உலகை சேர்ந்த, பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஃபாசிலின் மகன் தான் ஃபகத் ஃபாசில், இவருடைய சகோதரர் ஃபர்கான் பாசிலும் நடிகராக தான் உள்ளார். தன்னுடைய தந்தையைத் தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டு 'கையேதும் தூரம்' என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஃபகத் பாசிலுக்கு அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்காத நிலையில் தற்காலிகமாக திரையுலகை விட்டு சுமார் 7 வருடங்கள் விலகியே இருந்தார்.
இதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு, இவர் நடித்த 'கேரளா கபே' திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதில் மம்முட்டி, சுரேஷ் கோபி, திலீப், உள்ளிட்ட பல மலையாள முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். பின்னர் பிராமணி, காக்டெய்ல், டோர்னமெண்ட், பெஸ்ட் ஆஃப் லக், என அடுத்தடுத்து பல படங்களில் நடித்த இவருக்கு 'சப்பா கிருஷ்ணா' என்கிற படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான கேரளா அரசின் விருது கிடைத்தது.
ஹீரோவாக மட்டுமின்றி அழுத்தமான வேடங்களிலும் நடிக்கும், ஃபகத் ஃபாசில் தமிழில் இயக்குனர் மோகன் ராஜா, சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பை விட, ஃபகத் ஃபாசிலின் நடிப்பு அதிகம் கவனிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழில் நடிப்பு ராட்சஷன் என பெயர் எடுத்துள்ள ஃபகத் ஃபாசில், தற்போது தமிழில் ரஜினி - அமிதாப்பச்சன் நடிக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். எனவே தன்னுடைய பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, ரஜினி - அமிதாப் பச்சனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இவர் வெளியிட அது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.