MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தமிழ்நாட்டை ஆட்சி செய்த 4 முதல்வர்கள் இணைந்து நடித்த ஒரே ஒரு தமிழ் படம் - எது தெரியுமா?

தமிழ்நாட்டை ஆட்சி செய்த 4 முதல்வர்கள் இணைந்து நடித்த ஒரே ஒரு தமிழ் படம் - எது தெரியுமா?

தமிழ்நாட்டை ஆட்சி செய்த அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகிய 4 பேரும் ஒரு படத்தில் நடித்துள்ளார்கள். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 21 2025, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

4 Tamilnadu Chief Ministers Acted in a Tamil Movie : சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் மல்டி ஸ்டாரர் படங்கள் அதிகளவில் வருகின்றன. ஒரு படம் பான் இந்தியா அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் அதற்கு பல திரையுலகை சேர்ந்த நடிகர்களை நடிக்க வைப்பது அவசியமாக உள்ளது. ஆனால் 1970-களிலேயே ஒரு தனித்துவமான மல்டி ஸ்டார் படம் வந்திருக்கிறது. அந்த படத்தில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த 4 முதலமைச்சர்களான அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் நடித்திருந்தனர். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.

24
Engal Thangam Movie

Engal Thangam Movie

MGR - ஜெயலலிதா நடித்த எங்கள் தங்கம்

அந்த படத்தின் பெயர் ‘எங்கள் தங்கம்’. இப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கி இருந்தார். இப்படத்தில் கதையின் நாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த இப்படத்தை முரசொலி மாறன் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த 1970-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்திற்கு மூன்று தமிழக அரசின் விருதுகளும் கிடைத்தன.

இதையும் படியுங்கள்... எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அரசியல் டயலாக் உடன் உரையாற்றி வரும் விஜய்!

34
Engal Thangam Movie Poster

Engal Thangam Movie Poster

4 தமிழக முதல்வர்கள் நடித்த படம் Engal Thangam

இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் பின்னாளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். அதேபோல் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அண்ணாதுரை மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்கள். இவர்களும் தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்வர்கள் தான். இப்படி நான்கு தமிழ்நாட்டு முதல்வர்கள் நடித்த ஒரே படம் என்கிற பெருமையை எங்கள் தங்கம் திரைப்படம் பெற்றிருக்கிறது.

44
MGR - Jayalalitha

MGR - Jayalalitha

சம்பளமே வாங்காமல் நடித்த MGR - Jayalalitha

எங்கள் தங்கம் திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சம்பளமே வாங்காமல் நடித்தார்களாம். இப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ‘நான் செத்து பிழைச்சவன் டா’ என்கிற பாடல், எம்ஜிஆரை கடந்த 1967-ம் ஆண்டு எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பாடலாகும். இந்த பாடலை கவிஞர் வாலி தான் எழுதி இருந்தார். இந்த படத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதில் இடம்பெற்ற 6 பாடல்களையும் டி.எம்.செளந்தர்ராஜன் தான் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 18 வயதாகும் முன்பே ஹீரோயின் ஆன டாப் 10 தமிழ் நடிகைகள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
எம்.ஜி.ஆர்.
நினைவு மீட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved