Rajinikanth: மகள் ஐஸ்வர்யா செய்த குளறுபடி! கடும் கோபத்தில்.. கறாராக பேசி எச்சரித்த ரஜினிகாந்த்?
லால் சலாம் படத்தின் படபிடிப்பில், ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா இடையே மோதல் ஏற்பட்டதாக, புது தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம், தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷம் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தை, வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட குழு முடிவு செய்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா... கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இயக்கி வரும் 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், நடிகர் விஷ்ணு விஷால் - விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'பிச்சைக்காரன் 2' படத்தில் இருந்து கல்லூரும் பூவே... ரொமான்டிக் வீடியோ பாடல் வெளியானது!
இது கிரிக்கெட் பற்றிய திரைப்படம் என்பதால், ஒரு சில கிரிக்கெட் வீரர்களையும் இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க, ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவிற்கு முதல் முறையாக உலக கோப்பையை வாங்கி தந்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில், ரஜினியுடன் அவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த படத்தில், ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரத்தை தெரிவிக்கும் விதமாக கடந்த மாதம், ரஜினியின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. மும்பை பகுதியில் அதில் கலவரம் வெடித்து சிதறுவது போன்றும், ரஜினிகாந்த், தொப்பி, கண்ணாடி மற்றும் தாடியோடு மாஸாக நடந்து வருவது கட்டப்பட்டிருந்தது.
மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் மீதான தடை நீக்கம்! உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு..!
இந்த போஸ்டரை பார்த்து பலரும், இது அடுத்த 'பாட்ஷா' படமா? என்பது போல் கேள்வி எழுப்பினர். சிலர் இந்த போஸ்டர் ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்டது போல் உள்ளதாகவும், மனதை கவரும் விதத்தில் இல்லை என தங்களுடைய கருத்தை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்படத்தின் சூட்டிங்கிற்காக மும்பை சென்றிருந்த நிலையில், மூன்று நாட்கள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாகவும், மற்ற நாட்களில் தன்னுடைய அறையியேயே சும்மாவே இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஐஸ்வர்யாவின், சரியான திட்டமிடல் இல்லாததே என்று கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திடீர் என சந்தித்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ்! வைரலாகும் புகைப்படம்..!
ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைக்க பல இயக்குனர்கள் காத்திருக்கும் நிலையில், தன்னுடைய நேரத்தை, ஐஸ்வர்யா மகள் என்கிற உரிமையை பயன்படுத்தி வீணாக்குவதை பொறுக்க முடியாமல் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம், கறாராக பேசிவிட்டு, மும்பையில் இருந்து சென்னை திரும்பி வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது, சமூக வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.