- Home
- Cinema
- 'மாமன்னன்' படத்தில் வடிவேலு நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
'மாமன்னன்' படத்தில் வடிவேலு நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும், 'மாமன்னன்' திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்த கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க இருந்த பிரபலம் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'.
உதயநிதி அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளதால், 'மாமன்னன்' திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என்பதை, அமைச்சராக பதவி ஏற்ற உடனேயே உறுதி செய்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்தும் விலகியதாக அறிவித்தார். எனவே இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
விஜய் டிவி சர்ச்சை பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படம்!
இப்படத்தில் 'மாமன்னனாக' நடித்திருந்த வடிவேலுவின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பிரபலங்கள் பலர் இப்பாத்திற்காக வடிவேலுவுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்கிற தங்களின் கருத்தையும் வெளிப்படுத்தி இருந்தனர். வடிவேலுவை ஒரு காமெடி நடிகராகவே பார்த்து ரசிகர்கள் பழகி விட்டதால், இந்த எமோஷ்னலான கதாபாத்திரத்தில் அவர் ஓவராக நடித்தாலோ... நடிப்பை குறைந்தாலோ எதார்த்தம் என்பது காணாமல் போய் விடும். ஆனால் வடிவேலு, அந்த கதாபாத்திரமாகவே மாரி நடித்திருந்தார்.
maamannan
இந்த உயிரோட்டமான கதாபாத்திரத்தில் வடிவேலுவுக்கு பதில் இயக்குனர் மாரி செல்வராஜ் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க தான் முடிவு செய்தாராம். அவர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வடிவேலுவுக்கு பதில் நடிகர் சார்லியை நடிக்க வைக்க திட்டமிட்டாராம் மாரி செல்வராஜ். திடீர் என வடிவேலுவிடம் ஒரு வார்த்தை கேட்டு பார்க்கலாம் என யோசனை வர, அவரிடம் கதையை கூறி ஹீரோவாக நடிப்பது உதயநிதி என்பதை தெரிவித்துள்ளார். வடிவேலு உதயநிதி படம் என்பதால் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம். அதே போல் கதையும் வடிவேலுவுக்கு மிகவும் பிடித்திருந்ததாக பேட்டி ஒன்றில் கூறி உள்ளார் மாரி செல்வராஜ்.
இந்த தகவல் வெளியாக... வடிவேலு கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும் என தங்களின் கருத்தை ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சமூக நீதியையும், சமத்துவத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.