விக்ரம் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து பாடிய பாடல் எது? அட சூப்பர்ஹிட் பாட்டு தானா?
சீயான் விக்ரம் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார். அது எந்த பாடல் தெரியுமா?
Vikram
தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான நடிகர்கள் சீயான் விக்ரமும் ஒருவர். சவாலான கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் அவர் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. நடிகர் என்பதை தாண்டி டப்பிங் கலைஞர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் விக்ரம்.
தமிழ் சினிமாவில் அவர் பல பாடல்களை பாடி உள்ளார். ஆனால் நடிகர் விக்ரமும் பழம்பெரும் இசையமைப்பாளரும், பாடகருமான எம்.எஸ் விஸ்வநாதனும் இணைந்து ஒரு படத்தில் பாடி உள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா?
Vikram MSV Song
ஆம். 2010-ம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் படத்தில் சியான் விக்ரம் – எம். எஸ் விஸ்வநாதன் இருவரும் இணைந்து பாடி உள்ளனர். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இந்த படத்தில் மேகமே மேகமே என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.
Madharasapattinam
இந்த பாடலை விக்ரமும் – எம்.எஸ். விஸ்வநாதனும் இணைந்து பாடியிருந்தனர். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டான நிலையில், மேகமே, மேகமே பாடலும் ஹிட்டானது. இந்த பாடலுக்கென தனி ரசிக பட்டாளமே உள்ளனர்.
ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டின படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் லீட் ரோல்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தான் எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். வரலாற்று காதல் படமாக உருவான இந்த படம் தமிழ் பையனுக்கும் பிரிட்டிஷ் பெண்ணுக்கு இடையே ஏற்பட்ட காதலை மிகவும் சொல்லப்பட்டிருந்தது.
Madharasapattinam
மிகப்பெரிய ஹிட்டான இந்த படம் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக மாறி உள்லது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நடந்த கதையாக இந்த படம் உருவானது. 1940களில் இருந்த மெட்ராஸ் எப்படி இருக்கும் என்பதை படத்தின் கலை இயக்குனர் சிவகுமார் நம் கண் முன்னே நிறுத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.