ரஜினிக்கு வில்லனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா? கோலிவுட் திரையுலகையே வியக்க வைத்த சீயான் விக்ரம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடிக்க, சீயான் விக்ரமுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், திரையுலகினரை பிரமிக்க வைத்துள்ளது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில் இது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி, சில விவாதங்களுக்கு ஆளானது.
கவர்ச்சியில் பங்கம் பண்ணும் ஸ்ருதி ஹாசன்! ஓவர் ஹாட் போட்டோஸ்..
இந்த படத்தை முடித்த கையோடு, ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ள படத்தில்தான் தலைவர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 170 ஆவது படமாக தயாராகும் இந்த படத்தை, மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்த ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த படத்தில், முன்னணி நடிகர்கள் ஒருவரை ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க ஞானவேல் முடிவு செய்த நிலையில், இப்படம் குறித்து ஏற்கனவே நடிகர் விக்ரமிடம் பேசியதாகவும், அவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஹீரோவுக்கு நிகரான இந்த வில்லன் கதாபாத்திரத்தில், நடிப்பதற்கு சீயான் விக்ரமுக்கு ஒரே பேமெண்டில் 50 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க, லைக்கா நிறுவனம் முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜாக்கெட் போடாத சேலை போல இருக்கு? தினுசான மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்!
தற்போது வரை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விரைவில் தலைவருக்கு... விக்ரம் தான் வில்லனாக மாறுகிறார்கள் என்கிற அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட்டில் ஒரு தகவல் ரவுண்டு கட்டி வருகிறது. வில்லனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா? என இந்த தகவலை கேட்டு வாய் பிளக்கிறார்களாம் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள்.