ஜாக்கெட் போடாத சேலை போல இருக்கு? தினுசான மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்!
நடிகை ஐஸ்வர்யா மேனன்... புது மாதிரியான மாடர்ன் உடையில் படவிழாவில் கலந்து கொண்ட போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழில் சிறு சிறு வேடங்களில் நடித்து... இன்று ஹீரோயின் என்கிற கனவை எட்டி பிடித்துள்ளவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் ஏற்கனவே, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
விடா பிடியாக ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்த ஐஸ்வர்யா மேனனுக்கு, கடந்த 2016-ம் ஆண்டு வீரா என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், இதை தொடர்ந்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் நடிகர் மிர்ச்சி சிவாவை வைத்து இயக்கிய, தமிழ் படம் பார்ட் -2 வில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கெத்தாக BMW காரில் இருந்து இறங்கி... கையை காட்டி போஸ் கொடுத்த சூர்யா!
இந்த படத்தை தொடர்ந்து, ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக 'நான் சிரித்தால்' படத்திலும் நடித்திருந்தார். மெல்ல மெல்ல... தன்னுடைய வளர்ச்சிக்கு உயர்ந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் போட்டோ ஷூட் மற்றும் ஒர்க் அவுட் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் மூலம் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கசக்க ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ள ஸ்பை படத்தின் டீசர் லான்ச் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட, ஐஸ்வர்யா ஒரு தினுசான மாடர்ன் உடையில் கலந்து கொண்டார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர்... இது என்ன ஜாக்கெட் போடாமல் கட்டின சேலை போல் இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்! ரசிகர் கேள்விக்கு ஷிவாங்கி ஷாக்கிங் பதில்..!