'புஷ்பா 2' படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் யார் இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா?
அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்திற்கு பின்னர் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

ஐகான் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் மற்றும் 'மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்' திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து 'ஜூலாய்', 'S/O சத்தியமூர்த்தி' மற்றும் 'அலா வைகுண்டபுரமுலு' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு படமும் முந்தையதை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கண்டது. குறிப்பாக, 'அலா வைகுண்டபுரமுலு' உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்தது.
இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக தாங்கள் இணைந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை குரு பூர்ணிமாவை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இந்த முறை தெலுங்கு பார்வையாளர்களுடன் உலக சினிமா பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் படமாக இது இருக்கும் என்றும் இந்த கூட்டணி உறுதியளிக்கிறது.
பிரபாஸின் 'சலார்' டீசர் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!
'அலா வைகுண்டபுரமுலு' படத்தில் இருந்து 'சமஜவரகமனா, புட்ட பொம்மா, ராமுலோ ராமுலா' ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்போது, இந்தியத் திரைகளில் இதுவரை பார்த்திராத காட்சியைக் (Never before seen Visual Spectacle) கொண்டு வர இந்தக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
allu arjun
உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கையும் புதிய அனுபவத்தையும் தருவதை படக்குழு உறுதியளிக்கிறது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் கதை சொல்லும் திறமை இந்தக் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படத்தையும் மறக்க முடியாததாக ஆக்கியுள்ளது. 'ரவீந்திர நாராயண்', 'விராஜ் ஆனந்த்' மற்றும் 'பாண்டு' போன்ற பாத்திரங்களில் நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்ந்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பாத்திரமும் நடிப்பும் உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளன.
https://tamil.asianetnews.com/cinema/salaar-movie-teaser-release-update-rx7pw3
ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் மீண்டும் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் அவர்களின் எட்டாவது பட தயாரிப்புக்காக இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான முந்தைய மூன்று படங்களையும் மிகப்பெரிய பொருட்செலவில் ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்போது, தயாரிப்பு மதிப்புகளை இன்னும் அதிகமாக்கி, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பார்வையாளரையும் திருப்திப்படுத்த உலக அளவிலான தயாரிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான கீதா ஆர்ட்ஸ் பேனர், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் உடன் தயாரிப்பில் இணைகிறது. இதற்கு முன்பு இவர்கள் 'அலா வைகுந்தபுரமுலு' படத்திலும் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த இதர விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.