பிரபாஸின் 'சலார்' டீசர் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் கதாநாயகனாக மாறியுள்ள பிரபாஸ், இப்படத்தை தொடர்ந்து நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், இவர் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட குறைவதில்லை. அந்த வகையில் தற்போது பிரபாஸ், நடிகர் யாஷ் நடித்த 'கே ஜி எஃப்' படங்களை இயக்கிய, இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சலார்.
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிரித்திவிராஜ், திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சலார்' திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடித்து, இப்படத்தை வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது .
.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'சலார்' திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு, தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் ஜூலை 6 ஆம் தேதி காலை 5:12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தகவலை பிரபாஸின் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மகன்களுடன் மொட்டை போட்டு... மனம் உருகி பிரார்த்தனை செய்த தனுஷ்!
சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படம், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானாலும், சில சர்ச்சைகளில் சிக்கியது. இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்து அலஹாபாத் நீதிமன்றம், படக்குழுவினருக்கு எதிராக சரமாரி கேள்விகள் எழுப்பி எச்சரித்ததோடு மட்டும் இன்றி, இப்படத்தில் சம்மந்தப்பட்ட பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.