- Home
- Cinema
- Divya Sathyaraj : பயில்வான் ரங்கநாதன் எதிராக திவ்யா சத்யராஜ் தொடர்ந்த ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு... அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்
Divya Sathyaraj : பயில்வான் ரங்கநாதன் எதிராக திவ்யா சத்யராஜ் தொடர்ந்த ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு... அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்
Divya Sathyaraj Defamation Case : திமுக ஐடி விங் நிர்வாகியும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ், நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் 1 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

திவ்யா சத்யராஜ் vs பயில்வான் ரங்கநாதன்
திமுக ஐடி விங் நிர்வாகி திவ்யா சத்யராஜ், நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் 1 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார். தான் கொடுத்த ஒரு பேட்டிக்கு ரியாக்ட் செய்யும் விதமாக, பயில்வான் ரங்கநாதன் தன் மீது பொய்யான, அவதூறான கருத்துகளை பரப்பியதாக அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக திவ்யா சத்யராஜ் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், 'கணவன் - மனைவி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உண்மையாக விரும்பி சேர்ந்து வாழணும். கல்யாணம் ஆகிடுச்சுங்கிற ஒரே காரணத்துக்காக சேர்ந்து வாழக் கூடாது' என்று பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல், மதம், ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவதிலும் தனக்கு இஷ்டம் இல்லை என்று அவர் சொல்லியிருந்தார்.
‘விஜய்’ ஒரு போலி அரசியல்வாதி; ஆனா உதயநிதி... தளபதியை அட்டாக் பண்ணிய திவ்யா சத்யராஜ்!
வழக்கு தொடர்ந்த திவ்யா சத்யராஜ்
இந்த பேட்டி வெளியான பிறகு, அவருடைய அப்பாவும் நடிகருமான சத்யராஜ், மகளின் கருத்துக்கு சப்போர்ட் செய்து சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த விஷயமும் அந்த மனுவில் சொல்லப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்துதான், பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி பொய்யான, அவதூறான கருத்துகளை பேசியதாக திவ்யா சத்யராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக, பயில்வான் ரங்கநாதன் மற்றும் தனியார் யூடியூப் சேனல் ஓனர் முகைதீன் ஆகிய ரெண்டு பேரும் சேர்ந்து 1 கோடி ரூபாய் தர வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அதோடு, வழக்கு போட்ட நாளில் இருந்து அந்த தொகையை கொடுக்கும் வரை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதவிர, இனிமேல் தன்னை பற்றி எந்த ஒரு அவதூறு கருத்தையும் பேசவோ, எழுதவோ, வெளியிடவோ பயில்வான் ரங்கநாதனுக்கு நிரந்தர மற்றும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் திவ்யா சத்யராஜ் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திவ்யா சத்யராஜுக்கு எதிராக பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவிக்க தடைவிதித்துள்ளது. இதுபோன்ற ஆட்சேபகரமான கருத்துக்களை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்புவதை அனுமதிக்கக்கூடாது என கூகுள், எக்ஸ், பேஸ்புக் போன்ற சோசியல் மீடியா தளங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவிற்கு நோ.! திமுகவிற்கு ஓகே.! அரசியலில் அதிரடியாக இறங்கிய சத்யராஜ் மகள் திவ்யா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

