- Home
- Cinema
- Vaadivaasal : வாடிவாசலுக்காக தீயாய் வேலைசெய்யும் சூர்யா! வெற்றிமாறன் சொன்ன அப்டேட்டை கேட்டு மெர்சலான ரசிகர்கள்
Vaadivaasal : வாடிவாசலுக்காக தீயாய் வேலைசெய்யும் சூர்யா! வெற்றிமாறன் சொன்ன அப்டேட்டை கேட்டு மெர்சலான ரசிகர்கள்
Vaadivaasal : சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், வாடிவாசல் படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் சக்சஸ்புல் டைரக்டராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு விருதுகளையும் வென்று குவித்தது. தற்போது இவர் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்து வருகிறார்.
மேலும் விஜய்சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றன. ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதையடுத்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், இப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா, இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி பயிற்சி பெற்று வருவதாகவும், மாடுபிடி வீரர்களும் அவருக்கு பயிற்சி அளித்து வருவதாக அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... சிறு பட்ஜெட் படங்களையும் வெளியிட்டா நல்லாருக்கும்.. தேசிய விருது வென்ற இயக்குனரின் கோரிக்கையை ஏற்பாரா உதயநிதி?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.