RRR -க்கு புதிய பெயர் வைத்த பிரபல இயக்குனர்..இதுவும் சூப்பர் தான்
தூள் கிளப்பி வரும் ஆர்ஆர் ஆர் படம் குறித்து இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ள ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது.

RRR MOVIE
பிரபல இயக்குனர் ராஜமௌலி பல வெற்றி படங்களான மாவீரா, நான் ஈ, பாகுபலி என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை இயக்கியிருந்தார். அதோடு இதில் பாகுபலி இரண்டு பாகங்களும் இயக்குனரை பான் இந்தியா இயக்குனராக ராஜமவுலியை மாற்றியுள்ளது..
RRR MOVIE
பாகுபலி வெற்றியை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இதில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரு நாயகர்கள் கலக்கி உள்ளனர்.
RRR MOVIE
வரலாற்று நாயகனான சீதாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை ஒலிவியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...RRR movie : ரிலீசுக்கு முன்பே பாகுபலி சாதனையை அடிச்சுதூக்கி கெத்து காட்டும் ‘ஆர்.ஆர்.ஆர்’
RRR MOVIE
பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இந்த படத்தை டி.வி.வி.தானய்யா தயாரித்துள்ளார்.
RRR MOVIE
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போன இப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. உலகம் முழுக்க திரையிடப்பட்ட ஆர் ஆர் ஆர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
RRR MOVIE
ஆர் ஆர் ஆர் படம் ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டியது. ராஜமௌலியின் முந்தைய படைப்பான பாகுபலி 2 படத்தின் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளது. அமெரிக்காவில் முன்பதிவில் அதிக வசூல் ஈட்டிய புதிய சாதனை படைத்துள்ளது.
RRR MOVIE
ஆர் ஆர் ஆர் வெளியான முதல் நாளே 223 கோடியை வசூல் செய்தது. இரண்டாவது நாள் 243, மூன்றாவது நாள் 260 கோடிகளை வரிக்குவித்து மாஸ் காட்டியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... ஸ்க்ரீனை தெறிக்கவிட்ட புஷ்பா பேன்ஸ்..ஆர்ஆர்ஆர் ரசிகர்களுக்கு முள்வேலி போட்ட தியேட்டர்ஸ்..
RRR Movie
இந்த படம் குறித்து பிரபல இயக்குனர் செய்துள்ள ட்வீட் வேற லெவல் ட்ரெண்டாகி வருகிறது. ஆர் ஆர் ஆர் படம் குறித்து புகழாரம் சூட்டியுள்ள இயக்குனர் Ravishing,Riveting,Robust என குறிப்பிட்டுள்ளார். அதோடு ராஜமௌலியை மகாராஜா என கூறியுள்ளார்.