Asianet News TamilAsianet News Tamil

ஸ்க்ரீனை தெறிக்கவிட்ட புஷ்பா பேன்ஸ்..ஆர்ஆர்ஆர் ரசிகர்களுக்கு முள்வேலி போட்ட தியேட்டர்ஸ்..

ரசிகர்களின் குதூகலத்தல் ஸ்க்ரீன் கிழியாமல் இருக்க திரையரங்கு ஒன்றில் இருக்கைகளுக்கு திரைக்கும் இடையே முள்வேலி போடப்பட்டுள்ளது.

Fencing after screen before RRR release
Author
Chennai, First Published Mar 22, 2022, 8:52 PM IST | Last Updated Mar 22, 2022, 8:52 PM IST

திரைகளை தெறிக்கவிடும் ரசிகர்கள் :

தங்களது நட்சத்திரங்களின் வரவுக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள். பிரபலங்களின் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் மாஸாக வைரலாகுவர். அதோடு பட ரிலீஸ் நெருங்க நெருங்க உச்சகட்ட வெறித்தனத்தின் அடையாளமாக மற்றோரு பிரபலத்தை சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சிப்பர். அதோடு ரிலீஸ் அன்று திரையரங்கு அமைந்ததுள்ள பகுதியே அல்லோலப்பட்டு விடும்.

வலிமை அலங்கோலங்கள் :

சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் 2 அரை ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வெளியானது. இந்த பட ரிலீஸ் அன்று விடியற்காலையில் இருந்தே அலப்பறையை அஜித் ரசிகர்கள் ஆரம்பித்து விட்டனர். பாலபிஷேகம் செய்ய துணிந்த ரசிகர்கள் பால் வண்டியை திருடியது முதல் திறையரங்கை அடித்து நொறுக்கியது வரை பல கோரங்கள் நிகழ்ந்தன.

புஷ்பா கலவரங்கள் :

முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அதன் விளைவாக முதல் நாள் பல திரையரங்குகள் அலங்கோலமாகின. அதோடு அந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஓ சொல்ட்ரியா ஊ ஊ சொல்ட்ரியா பாடலுக்கு அடிமையான ரசிகர்கள் திரை மேடையில் ஏறி சமந்தாவின் ஸ்டேப் போட்டு அதிரவிட்டனர். இதனால் பல ஸ்கிரீன்கள் கிழிந்து தொங்கின.

மேலும் செய்திகளுக்கு... Radhe shyam : எதிர்பார்த்த வசூல் இல்லை... பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் ராதே ஷ்யாம்! கலக்கத்தில் RRR படக்குழு

Fencing after screen before RRR release

திரையரங்கு உரிமையாளர்களின் கதறல் :

பிரபலங்களின் படங்களை திரையிடுவதில் ஏகபோக போட்டியுள்ளது. தடிவிட்டால் ஒரு திரையரங்கு என பெருகி விட்ட இந்த காலத்தில் முன்னணி நாயகர்களின் படங்களை வாங்குவது சாமானிய விஷயமில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை திரையிட முனையும் திரையரங்கு உரிமையாளர்களின் நிலையை கலங்கடிக்கிறது படத்தின் பர்ஸ்ட் டே. ரசிகர்களின் மட்டற்ற குஷியால் திரையரங்கு சல்லி சல்லியாகி விடுகிறது. படத்தில் வரும் வசூலில் பெருமளவு திரையரங்கை புதுப்பிக்க போய் விடுவதாக பல உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

வெளியாகவுள்ள ஆர் ஆர் ஆர் :

பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பாக ஆர் ஆர் ஆர் தயாராகி உள்ளது. ராம் சரண்என்.டி.ஆர் என இரு பெரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதன் ட்ரைலர் படம் குறித்த எதிரிபார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த இரண்டு நாயகர்களும் ஒன்றாக கூட்டணி அமைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.

ஆர் ஆர் ஆர் -க்கு தயாராகும் ரசிகர்கள் :

கடந்த பொங்கல் ஸ்பெஷலாக ஆர் ஆர் ஆர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் கொரோனா பரவலால் படம் தள்ளிப்போனது. முன்னதாக இந்த படத்திற்கான பிரமாண்ட ப்ரோமோஷன் அனைத்தும் நிறைவு பெற்று விட்டன.  பின்னர் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து வரும் 25-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு... Valimai OTT Release : அஜித் `வலிமை` OTT ரிலீஸ் தேதி.. ` RRR` வசூலை பாதிக்குமா?

Fencing after screen before RRR release

வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்ட உரிமையாளர்கள் : 

இந்நிலையில் ஆர் ஆர் ஆர்  மூவி தரப்போகும் வசூலை விட அதன் ரசிகர்களால் உண்டாக உள்ள நஷ்டம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு உள்ளனர். அந்தவகையில் தெலுங்கானாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் இருக்கைக்கு திரைக்கு இடையே விலங்குகள் புகாமல் இருக்க போடப்படும் முள் வெளியை போட்டுள்ளனர். ஏற்கனவே இந்த திரையரங்கில் புஷ்பா படம் திரையிட்டபோது ஸ்கிரீன் கிழிந்த சம்பவம் மீண்டும் நிகழலாம் இருக்க இந்த முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர்களின் வேண்டுகோள் :

முன்னணி நடிகர்கள் படம் முடிவடைந்தவுடன் ப்ரோமோஷனுடன் நிறுத்திக்கொள்ளாமல் ஒரே நாள் கொண்டாடத்திற்காக எங்கள் வயிற்றில் அடிக்கும் செயல்களில் அவர்களது ரசிகர்கள் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் ஒவ்வொரு முறையும், கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தும் எந்த கோரமும் குறைவதாக இல்லை.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios