ஷங்கரின் அடுத்த பட ஹீரோ இந்த நடிகரின் மகனா? அப்போ கார்த்திருக்கும் செம்ம சம்பவம்!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த பட ஹீரோ யார்? என்கிற தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

தோல்வியை கண்டிடாத இயக்குனர் சங்கர்:
திரையுலகில் தோல்வியை கண்டிடாத இயக்குனர் என பெயர் எடுத்தவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் ஹீரோவாக நடித்த ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர், இதைத் தொடர்ந்து காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன், நண்பன், என பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.
இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர்:
கடந்த இரண்டு வருடமாக, இவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் இவருக்கு வெற்றியை தராமல் போனது. கடந்த ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து, இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமாக ஷங்கர் இயக்கிய, 'இந்தியன் 2' திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் பல ரசிகர்கள், இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் டச் இல்லை என விமர்சித்து வந்தனர்.
காதல் சுகுமார் சொன்ன வார்த்தை; சிம்புவுக்கு இந்த ஹிட் பாட்டை எழுதிய டி.ராஜேந்தர்!
ராம் சரணுக்கு மிகப்பெரிய தோல்வி :
இதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும், நடிகர் ராம் சரணுக்கு அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. தற்போது இவர் இயக்கி முடித்துள்ள 'இந்தியன் 3' திரைப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.
இந்தியன் 3:
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் பட குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள இளம் நடிகர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் சங்கரின் அடுத்த படத்தில், நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.
துருவ் விக்ரம்
துருவ் விக்ரமை, முன்னணி ஹீரோவாக மாற்றுவதில் தீவிரமாக இருக்கும் நடிகர் விக்ரம்... பாலா இயக்கத்தில் இவரை நடிக்க வைத்த 'வர்மா' திரைப்படம் தோல்வியை சந்தித்தது. பின்னர் இந்த படத்தை மீண்டும் ரீ கிரியேட் செய்த நிலையில், அந்த படமும் தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' வெற்றி பெற்ற அளவுக்கு தமிழில் வெற்றி பெறாமல் போனது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன்:
இதைத்தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்தில் நடித்து வருகிறார் துருவ். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படத்தை தொடர்ந்து, துருவ் விக்ரமை வைத்து இயக்குனர் ஷங்கர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படாமல், மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே விக்ரமை வைத்து இயக்குனர் சங்கர், ஐ , அன்னியன், ஆகிய இரு படங்களை இயக்கி வெற்றி கொடுத்துள்ளார். அதே போல் துருவ் விக்ரமுக்கும் ஷங்கர் வெற்றி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமா? சம்பள விஷயத்தில் கெத்து காட்டும் டாப் சீரியல் ஹீரோயின்ஸ்!