காதல் சுகுமார் சொன்ன வார்த்தை; சிம்புவுக்கு இந்த ஹிட் பாட்டை எழுதிய டி.ராஜேந்தர்!
காமெடி நடிகரும் - இயக்குனருமான காதல் சுகுமார், நான் விளையாட்டு சொன்னதை வைத்து. சிலம்பரசனுக்கு ஹிட் பாடலை டி ராஜேந்தர் எழுதி விட்டதாக கூறியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பன்முக திறமையாளர் என பெயர் எடுத்தவர் டி.ராஜேந்தர்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், என பல துறைகளில் கால் பதித்து அதில் வெற்றியும் கண்டவர் டி ராஜேந்தர். திரையுலகின் ராமர் என கூறும் அளவுக்கு எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத ஜென்டில்மேன் ஆக இருக்கும் டி ராஜேந்திரனுக்கு, தற்போது வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தீவிர சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற டி.ராஜேந்தர் சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் திரையுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறார்.
சினிமாவிற்கு தற்காலிகமாக கேப் விட்ட டிராஜேந்தர்
அவ்வபோது ஒரு சினிமா துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் இவர், ஒரு சில பட விழாக்களில் மட்டுமே கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது. தன்னுடைய மகன் சிலம்பரசனை சிறுவயதிலேயே, திரை உலகில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த டி ராஜேந்தர், பின்னர் ஹீரோவாக அறிமுகப்படுத்திய திரைப்படம் காதல் அழிவதில்லை.
ட்ரோன் மூலம் குழந்தையை காப்பாற்றிய ஷண்முகத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி? 'அண்ணா' சீரியல் அப்டேட்!
சிம்புவை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய டிஆர்
முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 2002 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை டி ராஜேந்தர் இயக்க, உஷா டி ராஜேந்தர் தயாரித்திருந்தார். சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சார்மி நடிக்க, மதன் பாப், கருணாஸ், வெண்ணிறாடை மூர்த்தி, சீதா, தாமு, நளினி, பிரகாஷ்ராஜ், ராதா ரவி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.
காதல் அழிவதில்லை படத்தில் இடம்பெற்ற 7 பாடல்
இந்த படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம் பெற்ற நிலையில், அனைத்து பாடல்களுக்கும் டி ராஜேந்திரரே இசையமைத்து பாடல் வரிகளையும் எழுதி இருந்தார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற... பார்க்காத போது போது, காதல் அழிவதில்லை, ஜோதிகாவா, கிளின்டன் மகளா, என் மனசில் நீயே தானா, மாறா மாறா, ஆகிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
காதல் சுகுமார் பெயரை வைத்து உருவான சிம்பு பாடல்
இந்த படத்தில் இடம்பெற்ற 'மாறா மாறா' பாடல் தன்னுடைய பெயரை வைத்து டி ராஜேந்தர் எழுதிய பாடல் என காதல் சுகுமார் தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது... "காதல் அழிவதில்லை படத்தின் சமயத்தில், டி ஆர் சார் ஆபிஸ்க்கு போனேன். காதல் அழிவதில்லை படத்துக்கு ஒரு ரொமான்ஸ் பாட்டு எழுத போவதாகவும், அதற்கு ஒன் லைன் கிடைக்கவில்லை என்று தன்னிடம் சொன்னார். நான் உடனே என் பெயரை வைத்து எழுதுங்க அப்படினு சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். ஆனா அவர் உண்மையாவே மாறா மாறா சுகுமாரானு ஒரு பாட்ட போட்டுட்டாரு. அந்தப் பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு அப்படின்னு சொல்லி இருக்காரு. இந்த தகவல் கேட்கும் ரசிகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கு.