மலையாள திரையுலக ஜாம்பவான் ஷாஜி என். கருண் காலமானார்
மலையாள திரையுலகில் இயக்குனரகாவும், ஒளிப்பதிவாளராகவும் முத்திரை பதித்த ஷாஜி என் கருண் கேன்சர் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Famous Malayalam director Shaji N. Karun passes away: Film industry shocked!
பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஷாஜி என். கருண் காலமானார். அவருக்கு வயது 73. திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. தேசிய, சர்வதேச அளவில் மலையாள சினிமாவை அடையாளப்படுத்திய ஷாஜி என். கருண் 1952 இல் பிறந்தார். பள்ளிக்கர பள்ளி, திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். பின்னர் பூனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து 1975 இல் ஒளிப்பதிவில் டிப்ளோமா பெற்றார்.
மலையாள திரையுலகின் ஜாம்பவான் ஷாஜி
சிறிது காலம் சென்னையில் பணியாற்றிய பின்னர், மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில் திரைப்பட அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் பிரபல இயக்குநர் ஜி. அரவிந்தனுடன் இணைந்து பணியாற்றினார். தொடர்ந்து கே.ஜி. ஜார்ஜ், எம்.டி. வாசுதேவன் நாயர் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாஜி, பிறவி, ஸ்வபானம், ஸ்வம், வானப்பிரஸ்தம், நிஷாத், குட்டி ஸ்ராங், ஏ.கே.ஜி. போன்ற பல கலைநயமிக்க படங்களை மலையாளத்திற்கு அளித்துள்ளார்.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது முதல் படமான பிறவி, கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருது உட்பட பல சர்வதேச விருதுகளைப் பெற்றது. அதிக சர்வதேச விருதுகளைப் பெற்ற மலையாளப் படம் பிறவி. ஸ்வம் என்ற படம் கேன்ஸ் திரைப்பட விழாவின் முக்கியப் பிரிவில் திரையிடப்பட்ட முதல் மலையாளப் படம்.
இதையும் படியுங்கள்... பிரபல நடிகர் மரணம் - திரையுலகில் அதிர்ச்சி!
விருதுகளை வென்று குவித்த ஷாஜி என் கருண்
கேரள மாநில திரைப்பட அகாடமியின் தலைவராகவும், சர்வதேச திரைப்பட விழாவின் (IFFK) தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2011 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். மலையாள சினிமாவிற்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்பிற்காக, கேரள அரசு,வ் ஜே.சி. டேனியல் விருது வழங்கி ஷாஜி என். கருணைனை கௌரவித்தது. காஞ்சனசீதா, தம்ப், கும்மாட்டி, எஸ்தப்பான், போக்குவேயில், சிதம்பரம், ஓரிடத்தில் போன்ற அரவிந்தன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது மற்றும் மூன்று மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஷாஜி என் கருண் சந்தித்த சர்ச்சைகள்
சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத ஒரு திறமையான மேதையாகவும் ஷாஜி என். கருண் இருந்தார். தேசிய விருதுகள் கிடைத்தபோதும், மாநிலத்தில் அங்கீகாரம் கிடைக்காததால் திரைப்பட அகாடமியுடன் மோதினார். குட்டி ஸ்ராங்க்குக்கு மாநில விருதுகள் கிடைக்காதபோது, பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். ஐந்து தேசிய விருதுகளை வென்று பழிதீர்த்தார். அகாடமி தலைவராக இருந்த கே.ஆர். மோகனனுடன் மோதல் ஏற்பட்டது. பெரும்பாலான கலைஞர்களைப் போலவே இடதுசாரிக் கொள்கைகளுடன் பயணித்தார். அவரின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... மஜா பட இயக்குனர் மரணம்; அவரின் மறக்க முடியாத திரைப்பயணம் ஒரு பார்வை!