மலையாளத்தில் ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள நடிகர் அஜித் விஜயனின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

யாரும் எதிர்பாராத சில பிரபலங்களின் மரணம், திரையுலகினரை மட்டும் அல்ல ரசிகர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. அந்த வகையில் தான், தற்போது உயிரிழந்துள்ள சீரியல் மற்றும் சினிமா நடிகர் அஜித் விஜயனின் மறைவு மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத்தில், ஏராளமான சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளவர் தான் அஜித் விஜயன். 57 வயதே ஆகும் இவர், திருப்பூணித்துறை கண்ணன்குளங்கரை பனங்கா என்கிற ஊரில் இன்று காலமானார். இவர், ஒரு இந்தியன் பிரணயகதா, அமர் அக்பர் அந்தோணி, பெங்களூர் டேய்ஸ் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மலையாள திரையுலகில் மட்டுமே நடித்துள்ள இவரை மற்ற மொழிகளில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

நாக சைதன்யாவின் பான் இந்தியா கனவில் விழுந்த மண்ணு; வசூலில் தத்தளிக்கும் தண்டேல்!

இவருடைய தந்தை கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர், புகழ்பெற்ற மோகினியாட்டக் கலைஞர் ஆவார். இவருடைய தாய் கல்யாணிக்குட்டியம்மாவும் ஒரு கதகளி கலைஞர். இவருக்கு மனைவி தன்யா, மதுரம் பிள்ளைகள் காயத்ரி, கௌரி ஆகியோர் உள்ளனர். தற்போது அஜித் விஜயனுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை நேரில் சென்றும் சமூக வலைத்தளம் மூலமாகவும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.