- Home
- Cinema
- Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட் - எப்போ ரிலீஸாகும்?
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட் - எப்போ ரிலீஸாகும்?
RJ Balaji Cried For Karuppu Delay : கருப்பு திரைப்படம் இன்று திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாததால் அப்செட் ஆன ஆர்.ஜே.பாலாஜி கண்ணீர்விட்டு அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

RJ Balaji Cried For Karuppu Delay
நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதன்கிழமை வெளியாகவிருந்த 'கருப்பு' திரைப்படம், கடைசி நேரத்தில் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது. படத்தின் காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க பல ரசிகர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு அவர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, மே 14-ம் தேதி அதிகாலையில் தனது X தளத்தில் இதுகுறித்து ஒரு பதிவை வெளியிட்டார். இந்த திடீர் ரத்துக்காக அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். "தவிர்க்க முடியாத காரணங்களால்" இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "தவிர்க்க முடியாத காரணங்களால் 'கருப்பு' படத்தின் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த மன்னிப்பு!" என்று பதிவிட்டிருந்தார்.
தாமதமான கருப்பு ரிலீஸ்
முன்னதாக, படத்தின் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜியும் படம் எதிர்கொள்ளும் தடைகள் குறித்துப் பேசியிருந்தார். மேலும், தயாரிப்பாளர்கள் வெளியீட்டிற்கு முன்பாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் கூறியிருந்தார். கடந்த 32 மாதங்களாக இந்தப் படம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து ஆர்.ஜே. பாலாஜி தனது பதிவில், "அன்பான ரசிகர்களே, தற்போதைய நிலைக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. தயாரிப்பாளர்கள் தடைகளைத் தீர்க்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்கள். இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே பல தடைகளை சந்தித்து வருகிறது. 32 மாதங்களுக்குப் பிறகு, கடவுள் எங்களை எல்லாவற்றையும் கடந்து வர வைத்துள்ளார். இந்த முறையும், அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கருப்பு படத்தின் அடுத்தடுத்த காட்சிகளும் ரத்தாகி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒரு சில பகுதிகளில் ரசிகர்கள் தியேட்டர் முன் போராட்டம் நடத்தியதையும் பார்க்க முடிந்தது. இதனால் கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ரசிகர்களுக்கு கண்ணீர்மல்க ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
கண்ணீர்விட்டு அழுத ஆர்.ஜே.பாலாஜி
கண்ணீர்விட்டு அழுதபடி பேசிய அந்த வீடியோவில், ரசிகர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். படம் பார்ப்பதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என எந்த மாநிலத்திற்கு காலையில் சென்றிருந்தாலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். நம் மனதிலும், வாழ்க்கையிலும் இருக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளிவர தான் படம் பார்க்கிறோம். ஆனால் அந்த படம் பார்ப்பதே ஒரு சவாலான ஒன்றாக மாறியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். நானும் இதை எதிர்பார்க்கவில்லை.
கருப்பு எப்போ ரிலீஸ்?
இன்னைக்கு சாயிங்காலம் 6 மணிக்கு இந்த பிரச்சனையெல்லாம் முடிந்து படம் ரிலீஸ் ஆகும்னு நான் எதிர்பார்க்கிறேன். மே 14ந் தேதி படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும்னு நிறைய தடவ யோசிச்சிருக்கேன். அதை இப்போ நினைச்சா அழுகை வருது. இன்னைக்கு சாயிங்காலம் எல்லா பிரச்சனையையும் முடிந்துவிடும் என நம்புகிறேன். நிறைய பேர் அதற்காக உழைக்கிறார்கள். சூர்யா சார் அதற்காக நிறைய கொடுத்திருக்கிறார். தாமதத்திற்கு மன்னிச்சிக்கோங்க. படம் இன்னைக்கு சாயிங்காலம் வரும். செம்மையா இருக்கும். கருப்பன் வரான் வழி மறிக்காதேனு சொல்லுவேன். நிறைய பேர் மறிச்சிக்கிட்டே இருக்காங்க. எல்லாத்தையும் தாண்டி சாயிங்காலம் படம் வரும்னு நம்புறேன் என கூறி இருக்கிறார்.
• Update - Director @RJ_Balaji On #Karuppu Release | @Suriya_offl pic.twitter.com/j3LiLBICKp
— Hari™ (@Hari_Socialist) May 14, 2026
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

