நடிகையின் காலை பிடித்து சூர்யா பட இயக்குனர் செய்த கன்றாவி வேலை... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
சர்ச்சைக்குரிய இயக்குனரான ராம் கோபால் வர்மா, கவர்ச்சி நடிகையின் காலை பிடித்து செய்யும் சில்மிஷ வேலைகளை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அமிதாப் பச்சன், சூர்யா என பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ராம் கோபால் வர்மா. ஆனால் சமீப காலமாக இவருக்கு மவுசு குறைந்துவிட்டதால், முன்னணி நடிகர்களை விட்டுவிட்டு, கவர்ச்சி நடிகைகளை வைத்து ஆபாச படங்களை இயக்கும் லெவலுக்கு சென்றுவிட்டார்.
அப்படி அவர் இயக்கும் படங்களை வெளியிட பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றையும் உருவாக்கி அதன்மூலம் கல்லாகட்டி வருகிறார் ராம்கோபால் வர்மா. அந்தவகையில் இவர் இயக்கத்தில் வெளியான நேக்கட், கிளைமாக்ஸ், காட் செக்ஸ் டுரூத் போன்ற அடல்ட் கண்டெண்ட் படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படியுங்கள்... Fanta பாட்டில் ஸ்ட்ரக்சர், எலும்புக்கூடு மாதிரி இருக்கனு கிண்டலடித்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த திவ்யபாரதி
இவ்வாறு சர்ச்சைக்கு பெயர்போன இயக்குனராக உருவெடுத்துள்ள ராம் கோபால் வர்மா, தற்போது டேஞ்சரஸ் என்கிற லெஸ்பியன் கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு போட்டியாக வெளியிட உள்ளதாக சீன் போட்டு மொக்கை வாங்கிய ராம்கோபால் வர்மா, தற்போது மீண்டும் அதன் வெளியீட்டு பணிகளில் பிசியாக இறங்கி உள்ளார்.
டேஞ்சரஸ் படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகை அஷு ரெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ராம் கோபால் வர்மா. அந்த வீடியோவில் நடிகை அஷு ரெட்டியின் காலை பிடித்து தடவுவது, முத்தம் கொடுப்பது என ராம் கோபால் செய்யும் கன்றாவி வேலைகளை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 2022-ல் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலை வெளியிட்ட கூகுள்! டாப் 10-ல் இடம்பெற்ற ஒரே ஒரு நடிகை - என்ன காரணம்?