Fanta பாட்டில் ஸ்ட்ரக்சர், எலும்புக்கூடு மாதிரி இருக்கனு கிண்டலடித்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த திவ்யபாரதி
கல்லூரியில் படித்ததில் இருந்து தற்போது வரை தான் எதிர்கொண்ட உருவகேலிகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார் திவ்ய பாரதி.
கோயம்புத்தூரை சேர்ந்தவர் திவ்ய பாரதி. மாடல் அழகியாக இருந்த இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த ஆண்டு இறுதியில் ரிலீசான பேச்சிலர் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் திவ்ய பாரதி. முதல் படத்திலேயே கர்ப்பிணி பெண்ணாக நடித்து கவனம் ஈர்த்தார்.
இதையடுத்து சேரன் இயக்கும் வெப் தொடரில் நடித்துள்ள இவர், முகென் ராவுக்கு ஜோடியாக மதில்மேல் காதல், கதிர் உடன் ஆசை போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படி சினிமாவில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார் திவ்ய பாரதி.
இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இது ஒருபுறம் இருந்தாலும், இவரது உடல் அமைப்பு கேலி செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வந்தது. இந்நிலையில், கல்லூரியில் படித்ததில் இருந்து தற்போது வரை தான் எதிர்கொண்ட உருவகேலிகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார் திவ்ய பாரதி.
அதில் அவர் கூறியிருப்பதாவது : “சமீப நாட்களாக எனது உடல் அமைப்பு போலியானது என்றும் நான் எனது இடுப்பு பகுதியில் பேடுகள் வைத்திருப்பதாகவும், எனது இடைக்காக நான் அறுவை சிகிச்சை செய்து உள்ளதாகவும் கமெண்ட்டுகளை அதிகளவில் பார்க்க முடிந்தது. இதுமட்டுமல்ல எனக்கு Fanta பாட்டில் ஸ்ட்ரக்சர் என்றும் எலும்புக்கூடு மாதிரி இருப்பதாகவும் நிறைய பேர் கேலி செய்தனர்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்... ஜோடியாக வெளியேறப்போகும் அந்த 2 பேர் யார் தெரியுமா?
கல்லூரி நாட்களில் கூட எனது ஸ்லாம் புக்கில் எனது தோழிகளே எனது உடல் அமைப்பை கேலி செய்து வரைந்துள்ளதையும் இங்கு பதிவிட்டுள்ளேன். இவையெல்லாம் என்னை மிகவும் பாதித்தது. என் உடலை நானே வெறுக்கும் நிலைக்கு என்னை தள்ளியது. மக்கள் முன் இயல்பாக நடக்ககூட பயந்தேன். அது என்னுடைய தவறு இல்ல. இயல்பாகவே என்னுடைய உடல் அமைப்பு அப்படி இருந்தது.
பின்னர் 2015-ம் ஆண்டு நான் என் மாடலிங் பயணத்தை தொடங்கினேன். அதிலிருந்து நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் பாராட்டுக்கள் கிடைக்க தொடங்கின. குறிப்பாக என் உடல் அமைப்பை பாராட்டினர். நான் ஜிம்முக்கே போனதில்லை என்றாலும், நிறைய பேர் என்னுடைய ஒர்க் அவுட் பற்றி கேட்க தொடங்கினர்.
அதிலிருந்து என் உடலை பற்றி நானே பெருமைகொள்ள தொடங்கினேன். இதுவே எனக்கு தைரியத்தையும் கொடுத்தது. விமர்சனங்களை மனதில் எடுத்துக்கொள்ளாத வரை நாம் வலிமையானவராகவும், அன்பானவராகவும் இருப்போம்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... 2022-ல் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலை வெளியிட்ட கூகுள்! டாப் 10-ல் இடம்பெற்ற ஒரே ஒரு நடிகை - என்ன காரணம்?