2022-ல் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலை வெளியிட்ட கூகுள்! டாப் 10-ல் இடம்பெற்ற ஒரே ஒரு நடிகை - என்ன காரணம்?
இந்தியாவில் 2022-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் ஒரே ஒரு நடிகையின் பெயர் மட்டுமே இடம்பெற்று உள்ளது.
புகழ்பெற்ற தேடுபொறி தளமான கூகுள் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்கள், நடிகைகள், நட்சத்திரங்கள் பற்றிய டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்த ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் ஒரே ஒரு நடிகையின் பெயர் மட்டுமே இடம்பெற்று உள்ளது. அவர் நடிகை சுஷ்மிதா சென் தான்.
அவரை கூகுளில் அனைவரும் வலைவீசி தேடியதற்கு காரணம், அவரும் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியும் டேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது தான். அந்த புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவியதால், அது உண்மையா என்பதை தெரிந்துகொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6-ல் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்... ஜோடியாக வெளியேறப்போகும் அந்த 2 பேர் யார் தெரியுமா?
அதனால் தான் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென் இருவருமே இடம்பெற்று உள்ளனர். இந்த பட்டியலில் லலித் மோடி 4-வது இடத்திலும், சுஷ்மிதா சென் 5-வது இடத்திலும் உள்ளனர். இதில் நுபுர் சர்மா என்கிற பெண் அரசியல்வாதி தான் முதலிடத்தை பிடித்துள்ளார்.
Sushmita Sen lalit modi
பாஜக-வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார். இந்த பட்டியலில் இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மு இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் பாலாவை நம்பி... வணங்கான் படத்துக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா சூர்யா? - வெளியான ஷாக்கிங் தகவல்