நான்கே படத்தில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த மாரி செல்வராஜ்..! உதயநிதி துவங்கி வைத்த படப்பிடிப்பு..!
இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய 4 ஆவது படமான 'வாழை' படத்தை இயக்கி தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், 'வாழை' திரைப்படத்தின் படபிடிப்பு இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
தமிழ் திரையுலகில் தன்னுடைய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம், அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.
சண்டை கோழியாக மாறிய தனலட்சுமி...! மைனாவிடம் துவங்கி இப்போ ஷிவினையும் விட்டு வைக்கல..! ப்ரோமோ!
இதை தொடர்ந்து, துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவும் உள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாத நிலையில், தன்னுடைய நான்காவது திரைப்படமாக 'வாழை' படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.
இந்த படத்தை நடிகர் உதயநிதி கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பில், படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுசிறப்பித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பை 'மாமனிதன்' பட நாயகன் உதயநிதி ஸ்டாலின் க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.
ரெட் ஹாட் ஏஞ்சல் போல் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி மயக்கும் ராஷ்மிகா - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
நான்கு சிறுவர்களை மையப்படுத்து இப்படம் எடுக்கப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்ற பலர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். சூரிய பிரதமான் படத்தொகுப்பு செய்தும் இந்த படத்தில், யுகபாரதி, வெயில் முத்து ஆகியோர் பாடல்கள் எழுத உள்ளனர். தற்போது இந்த படம் குறித்த அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காதல் மனைவி ஷாலினியின் பிறந்தநாளை அமர்களமாக கொண்டாடிய அஜித் - வைரலாகும் பர்த்டே போட்டோஸ்