சண்டை கோழியாக மாறிய தனலட்சுமி...! மைனாவிடம் துவங்கி இப்போ ஷிவினையும் விட்டு வைக்கல..! ப்ரோமோ!

முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் தலைவர் டாஸ்கில் வெற்றி பெற்ற மைனா நந்தினியை தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என வாக்குவாதம் செய்த தனலட்சுமி இரண்டாவது புரோமோவில், ஷிவின் மீது பாய்ந்துள்ளார். இதுகுறித்த பரபரப்பு புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 

Dhanalakshmi angry speech today biggboss promo

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் நிவா வெளியேறிய நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளே சண்டை கோழியாக மாறி, பிரச்சனைகளுக்கு வரிந்து கட்டி நிற்கிறார் தனலட்சுமி.

அந்த வகையில் முதல் புரோமோவில், இந்த வார தலைவருக்கான டாக்கில் வெற்றி பெற்ற மைனாவை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என, அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். பின்னர் இவரை சக போட்டியாளர்கள் தேற்றிய போது, தங்களின் தரப்பு நியாயத்தை கூற வந்த ரக்ஷிதாவிடம் தயவு செஞ்சு போறீங்களா என கூறி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.

Dhanalakshmi angry speech today biggboss promo

ரெட் ஹாட் ஏஞ்சல் போல் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி மயக்கும் ராஷ்மிகா - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், சமையல் டீமில் ஏற்கனவே இடம்பெற்றவர்கள் மீண்டும் எப்படி இடம்பெறலாம் என, உப்பு சப்பு இல்லாத ஒரு பிரச்னையை வளர்க்கிறார். இதற்க்கு ஷிவின், மற்றவர்களுக்கு சமைக்க தெரியாது என்பதால் அவர்கள் மீண்டும் அதே டீமில் இடம்பெற்றுள்ளனர் என விளக்கம் கூற, உங்கிட்ட நான் பேசுனனா என வேண்டும் என்றே சண்டை வாங்குவது போல் நடந்து கொள்ளு விதம் இந்த புரோமோவை பார்பவர்களையே கடுப்பாக்கி உள்ளது.

Dhanalakshmi angry speech today biggboss promo

அர்த்தமின்றி, கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக தனலட்சுமி இந்த வாரம் சண்டை போட்டால்... கடந்த வாரம் நூல் இழையில் தப்பித்திருந்தாலும், இந்த வாரம் வெளியேற்றப்படுவது உறுதி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள பரபரப்பு புரோமோ இதோ.. 

குட்டி நயனின் கிளாமர் அட்ராசிட்டி.. குட்டை உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த அனிகா! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios