MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் பாகம் ரிலீஸ் ஆவதற்குள் ‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட மணிரத்னம்

முதல் பாகம் ரிலீஸ் ஆவதற்குள் ‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட மணிரத்னம்

Ponniyin selvan : சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியின் போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். 

1 Min read
Author : Ganesh A
Published : Sep 18 2022, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் வகையில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் மணிரத்னம். அவர் பலவருட கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படம் தான். அந்த படத்தை தற்போது ஒரு வழியாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். இதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... பள்ளி மாணவிகளை சந்தித்த கமல் ஹாசன்..வைரலாகும் வீடியோ இதோ

34

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்னம், நடிகை திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

44

அந்த நிகழ்ச்சியின் போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் முதல் பாகம் வெளியான 6 அல்லது 9 மாதங்களுக்கு பின்னர் இரண்டாம் பாகம் ரிலீஸ் செய்யப்படும் என கூறி உள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட பிளான் போட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... பிரபல பாலிவுட் நடிகையுடன் டேட்டிங்... கத்துவாக்குல மீண்டும் காதல் வலையில் சிக்கிய பிரபாஸ்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vishnu Vishal : நான் ஒரு நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்... 3 ஆண்டுகளாக மறைத்து வைத்த ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்
Recommended image2
Rajinikanth Movie Update : டிசம்பரில் ரிலீசாகும் சூப்பர்ஸ்டாரின் 'தர்மன்'! சென்னையில் சத்தமில்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு!
Recommended image3
குஷ்பூ மகள் திருமணம்... ஒட்டுமொத்த கோலிவுட்டும் Goa-ல தான் இருக்கு - வைரலாகும் போட்டோஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved