பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குனர்!
திரையுலகில் இயக்குனராக வெற்றிகண்ட இயக்குனர்கள், ஹீரோவாக களமிறங்க துவங்கிவிட்டனர். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து ஹீரோவாக நடிக்க உள்ள இளம் ஹீரோ பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன்:
தமிழ் சினிமாவில் தற்போது வெற்றிகரமான இயக்குனராக மட்டும் இன்றி, இளம் ஹீரோவாகவும் அடுத்தடுத்த வெற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிகர் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வாலை வைத்து, 2021-ஆம் ஆண்டு இயக்கிய 'கோமாளி' திரைப்படம், திரைக்கு வந்து ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக 90'ஸ் கிட்ஸ் தற்போது என்னென்ன விஷயங்களை மிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நியாபகப்படுத்தியது .
Love Today Movie Success:
லவ் டுடே:
இந்த படத்தின் வெற்றியை தொடந்து, இவர் இயக்கி ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் 'லவ் டுடே'. இந்த படத்தில் இவரே ஹீரோவாக நடிக்க, இந்த படத்தை AGS நிறுவனம் தயாரித்திருந்தது. ரூ.5 கோடி பட்ஜட்டில், பெரிதாக எந்த ஒரு ஸ்டார் வேல்யூ இல்லாமல் உருவான இந்த படம், உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. எதார்த்தமான காதல் கதையும், வித்தியாசமான திரைக்கதையும் தான் இந்த படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.
Vignesh Shivan and Pradeep Ranganathan Movie
விக்னேஷ் சிவன் படத்தில் நடித்துள்ள பிரதீப் ரங்கநாதன்
மேலும் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், அடுத்தடுத்து சில இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியாக மற்றொரு இயக்குனர் ஹீரோவா களமிறங்க உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த இளம் இயக்குனர் இயக்கி - நடிக்க உள்ள படத்தையும் AGS நிறுவனமே தயாரிக்க உள்ளதாம்.
Star Movie Director Ilan:
Director Ilan:
அந்த இயக்குனர் வேறு யாரும் அல்ல, கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இளன் தான். காதல் மற்றும் எமோஷ்னல் கதைக்களத்தை மையமாக வைத்து இவர் எழுதிய கதையில் தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். கூடிய விரைவில் இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.