ICU-வில் உள்ள பாரதிராஜா.. உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜா, சமீபத்தில் தனது மகனை இழந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Bharathiraja Health Update
தமிழ் சினிமாவில் கிராமிய மணத்தையும், இயல்பான மனித உணர்வுகளையும் புதிய வடிவில் அறிமுகப்படுத்திய இயக்குநர்களில் முதன்மையானவர் பாரதிராஜா. ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து கவனம் ஈர்த்தார்.
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா
அதன் பின் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை வழங்கி தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கினார். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர் பாரதிராஜா. அதே நேரத்தில், ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கே சேரும்.
பாரதிராஜா
இயக்குநராக மட்டுமல்ல, தன்னை காலப்போக்கில் நடிகராகவும் மாற்றிக் கொண்டு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்த அவர், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ்க்கு தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. வயதை மீறிய நடிப்பு அவரின் அனுபவத்தை வெளிப்படுத்தியது.
பாரதிராஜா ஹெல்த் அப்டேட்
இந்த நிலையில், பாரதிராஜாவின் ஒரே மகனும், நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் திடீரென காலமானது அவரை கடும் மனவேதனையில் ஆழ்த்தியது. அந்த துயரத்திலிருந்து மீள்வதற்காக மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்த அவர், பின்னர் சென்னை திரும்பினார்.
மருத்துவமனை விளக்கம்
தற்போது 80 வயது கடந்துள்ள பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

